தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. சாட்டையை சுழற்றும் ஹைகோர்ட்.. சிக்கும் வட்டாட்சியர்கள்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 3 துணை தாசில்தார்களையும் வழக்கில் சேர்க்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 3 துணை தாசில்தார்களையும் வழக்கில் சேர்க்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22ஆம் தேதி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை வெடித்ததில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
2 நாட்கள் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வழக்கறிஞர் அமுதநாதன்
இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி வழக்கறிஞர் முத்து அமுதநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை, தமிழக தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தாசில்தார்களுக்கு சிக்கல்
மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எதிர்மனுதாரராக 3 துணை தாசில்தார்களை சேர்க்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கில் சேர்க்கப்பட்ட 3 தாசில்தாரர்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
துணை தாசில்தாரர்கள் சேகர், கண்ணன், கண்ணன் ஆகியோர் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் கருத்து
துப்பாக்கிச்சூடு என்பது மிகவும் தீவிரமான பிரச்சனை என்றும், என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications