ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிகமாக மின்சாரம் வழங்க முடியாது.. ஹைகோர்ட் கிளை அதிரடி!
ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிகமாக மின்சாரம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
மதுரை: ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிகமாக மின்சாரம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் தொடர் போராட்டம் காரணமாக கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து அரசு அமைத்த உயர்மட்ட நிபுணர்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து அமிலங்களையும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தற்காலிக மின் இணைப்பு வழங்க கோரியும் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்திருந்தது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்மட்ட நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து அமிலங்களையும் அகற்றும்பணி நடக்கிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சில அமிலங்களை 90 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனை ஏற்ற உயர்நீதிமன்ற கிளை, உயர்மட்ட நிபுணர் குழு அனைத்து பணிகளையும் முறையாக மேற்கொள்வதாக கூறி மின்சாரம் வழங்க மறுப்பு தெரிவித்ததோடு வேதாந்தா குழும வழக்கை முடித்து வைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications