பத்தாம் வகுப்பில் கட்டாய தமிழ் தேர்வு: விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பத்தாம் வகுப்பில் கட்டாயமாகத் தமிழ் தேர்வு எழுத விலக்கு கோரியவர்களுக்கு விலக்கு அளிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவிட்டது.
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று 2006-இல் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், 2015-16-ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வின்போது தமிழ் தேர்வு எழுதுவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் இதற்காக ஒரு குழுவை அமைத்து விரைந்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞர் கிருஷ்ணா ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, இந்த ஆண்டு தமிழ் அல்லாது பிற மொழிகளில் தேர்வெழுத அனுமதி கேட்டு, சுமார் 7ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அவர்கள், தாங்கள் விரும்பும் மொழியிலேயே பத்தாம் வகுப்பு அரசு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை, வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications