வேலூர், திருச்சியில் சுட்டெரிக்கும் வெயில் ...107 டிகிரியை தொட்டது
வேலூர்: வேலூர், திருச்சியில் நேற்று கடும் வெயில் நிலவியது. முதல் முறை அதிகபட்சமாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகரம் சென்னையாக இருந்தாலும், வெயிலின் தலைநகராக மாறி வருகிறது வேலூர். வெளியில் தலைகாட்ட முடியாத அளவில் வெயில் வாட்டி வதைக்கிறது.

அக்னி நட்சத்திர கால வெயிலை விட அனல் காற்று வீசுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து சென்றாலே படபடப்பும், மயக்கமும் உயிருக்கே ஆபத்தான நிலையை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து ஓரிரு மாவட்டங்களில் மழை பதிவாகியது. அதைத் தொடர்ந்து, மீண்டும் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பத்துடன் கூடிய அனல் காற்று வீசுகிறது.
வேலூர், திருச்சியில் நேற்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை பதிவான வெயில்
வேலூர், திருச்சி 107
கரூர் பரமத்தி 106
திருப்பத்தூர், தருமபுரி,
சேலம், பாளையங்கோட்டை, மதுரை 105
மீனம்பாக்கம், நாகை 102
தொண்டி, கோவை 100


Click it and Unblock the Notifications
