மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள்ஒதுக்கீட்டுக்கு தடை இல்லை...உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழக அரசு வெளியிட்ட 85% உள் ஒதுக்கீட்டு ஆணைக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் தமிழக மாணவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு அளித்து அண்மையில் தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இது மருத்துவ மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 Highcourt Gives green signal to Reservation in Medical admission

இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்ட ஆணையை எதிர்த்து கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மருத்துவ மாணவர் சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடரும்; 85% உள் ஒதுக்கீட்டுக்கு தடை இல்லை என்று கூறி உத்தரவிட்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Highcourt Gives green signal to 85% Reservation in Medical admission.
Please Wait while comments are loading...