பொள்ளாச்சியில் காதலை ஏற்க மறுத்த மாணவியை உயிரோடு எரிக்க முயற்சி- இளைஞர் தப்பி ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் 12ம் வகுப்பு மாணவியை உயிரோடு எரிக்க முயற்சி நடந்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே செஞ்சேரிப்புதூரில் வசிக்கும் இளைஞர் செல்வகுமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12ம் மாணவி ஒருவரை காதலிப்பதாகத் தெரிவித்து உள்ளார். ஆனால், அந்தப் பெண் காதலுக்கு மறுப்பு சொன்னதாக சொல்லப்படுகிறது.

Highschool Girl was set fire to death at Pollachi for not accepting love proposal

இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் அந்த மாணவியை மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளார். மாணவியின் அலறல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். இந்நிலையில் செல்வகுமார் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை தேடி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Highschool Girl was set fire to death, Accused Youngster Selvakumar Ran away from the sight Police investigating Further in Avinashi.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற