ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்.. இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கைது!
நாகப்பட்டினம்: ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருளை நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வேளாங்கண்ணியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு விலை உயர்ந்த போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு சனிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து வேளாங்கண்ணிக்கு சென்றனர்.

தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், வேளாங்கண்ணி பேராலய பகுதியில் கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது, பார்க்கிங்கில் ஒரு காரில் இருந்த மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் அவர்கள், நாகையை சேர்ந்த இந்து மக்கள் கட்சி நாகப்பட்டினம் மாவட்ட வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் (40), பூம்புகாரை சேர்ந்த ஆனந்தராஜ் (33), வேதாரண்யத்தை சேர்ந்த முருகன் (எ) காஞ்சிநாதன் (31) ஆகியோர் என்பதும், அவர்கள் ரூ.6 கோடி மதிப்பிலான 2 கிலோ மெஸ்கலின் என்ற உயர் ரக போதைப் பொருளை இலங்கைக்கு படகு வழியாக கடத்த இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 3 பேரிடமும் இருந்த போதைப் பொருளை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட அந்த போதைப் பொருளின் மதிப்பு ரூ.6 கோடி இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications