தமிழகம் குஜராத்தாக மாறும்.. இந்து முன்னணி தலைவர் மிரட்டலால் கோவையில் தொடரும் பதட்டம்
கோவை: இந்து அமைப்பினர் மீதான தாக்குதலை போலீஸார் தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழகம் குஜராத்தாக மாறுவதைத் தடுக்க முடியாது என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருப்பதால் வன்முறையால் பாதிக்கப்பட்ட கோவையில் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது.
கோவை மாவட்ட இந்துமுன்னணி செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரை கொன்றது யார் என்று தெரியவில்லை. ஜாதி ஆணவக் கொலைாகவும் இது கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தக் கொலையைத் தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பினர் கோவையில் வெறியாட்டம் போட்டு விட்டனர். வன்முறையில் ஈடுபட்டு போலீஸ் ஜீப், வாகனங்களைத் தீவைத்து எரித்தும், கடைகளை அடித்து நொறுக்கியும் வன்முறையில் ஈடுபட்டதால் கோவை நேற்று ஸ்தம்பித்தது.
இந்த நிலையில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறுபான்மையினருக்கு மிரட்டல் விடும் வகையில் பேசியுள்ளார். அவரது பேச்சிலிருந்து:

அடுத்தடுத்து தாக்குதல்
தமிழகத்தில் இந்து அமைப்பினர்கள் அடுத்தடுத்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். குறுகிய காலத்திற்குள் 3 இந்து அமைப்பினர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உளவுத்துறை என்ன செய்கிறது
தமிழகத்தில் உளவுத்துறை என்ன செய்கிறது என்று தெரியவில்லை. அரசு சரியில்லை, எனவே உளவுத்துறையும் சரியில்லை. உளவுத்துறை சரியாகப் பணியாற்றினால் இதுபோன்ற கொலைகளைத் தடுத்திருக்க முடியும்.

தமிழகம் குஜராத்தாக மாறும்
இதுபோன்ற தாக்குதல்கள், கொலைகள் நடைபெறாமல் காவல்துறை எதிர்காலத்தில் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் குஜராத்தாக மாறுவதை தடுக்க முடியாது. அது நிச்சயம் நடக்கும்.

சிறுபான்மையினர் அச்சம்
ஏற்கனவே கோவை ஒரு பெரும் அசம்பாவிதத்தை கடந்த காலத்தில் சந்தித்து மீண்டது. இந்த நிலையில் குஜராத்தாக மாறும் என்று இந்து முன்னணி தலைவர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருப்பது கோவையில் வசிக்கும் சிறுபான்மையினர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications