சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் முத்தப்போராட்டம்: நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்
சென்னை: ஐஐடி மாணவர்களின் முத்தப் போராட்டத்துக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் (தமிழகம்) அலுவலக செயலாளர் எஸ்.ஆர்.குமாரவேல் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவ- மாணவிகள் எந்தவித முன் அனுமதியின்றி ‘கிஸ் ஆப் லவ்' என்ற பெயரில் காம வெறியாட்டம் ஆடியுள்ளனர்.
இந்தியா முழுவதிலும் உள்ள இந்துக்களின் மனதை இச்சம்பவம் மிகவும் பாதித்துள்ளது. இதில் ஈடுபட்ட மாணவர்களை ஐ.ஐ.டி.யில் இருந்து டிஸ்மிஸ் செய்வதுடன், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கலாச்சாரம், பண்பாடு, நாகரீகத்தை பேணி காக்கும் தமிழகத்தில் இதுபோன்ற மேற்கத்திய கலாச்சாரத்தை எந்த சூழலிலும் அனுமதிக்க முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற ஓட்டலுக்கு சென்ற பாஜக வினர் அநாகரிக செயல்களில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.
இதனை தொடர்ந்து பாஜக தொண்டர்களுக்கும், இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதற்கு இரு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும், இதனை கண்டிக்கும் வகையில், "கிஸ் ஆப் லவ்" என்ற முத்தம் கொடுக்கும் அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பினர் பொது இடங்களில் கூடி ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த போவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து, கடந்த 2ஆம் தேதி கொச்சியில் இந்த அமைப்பினர் கூடி ஒருவருக்கொருவர் முத்தமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினரும் அங்கு குவிந்தனர்.
அங்கு வந்த போலீசார் முத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டினர். இந்நிலையில், இந்த முத்தம் கொடுக்கும் அமைப்பிற்கு பல பகுதியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் ஒரு அங்கமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பை ஐஐடியில் முத்தம் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சென்னை ஐஐடி மாணவ-மாணவிகள் சிலர் நேற்று ஐஐடி வளாகத்தில் கிஸ் ஆப் லவ் அமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications