தமிழக- இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையை ஒத்தி வைக்க தமிழக அரசு கடிதம்!
சென்னை: தமிழக- இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தையை ஒத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் குற்றம்சாட்டி ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகுகளும் பிடித்து வைக்கப்பட்டன.
இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் வைத்த வேண்டுகோளை ஏற்று சென்னையிலும், கொழும்பிலும் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

பொதுவாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் இடம், தேதி போன்றவற்றை, இலங்கை மற்றும் தமிழக அரசிடம் பேசி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நிர்ணயித்து வந்தது. இந்த நிலையில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னை தேனாம்பேட்டை மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற இருந்தது.
ஆனால் இக் கூட்டத்தை 11-ந்தேதி நடத்த உத்தேசித்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்தது. இப்படி தேதி முடிவாகாததால் இதுவரை கூட்டம் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் இப்பேச்சுவார்த்தை குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மார்ச் 11-ந்தேதி நடத்துவதாக இலங்கை அரசால் உத்தேசிக்கப்பட்ட மீனவர் பிரதிநிதி கூட்டத்தில் பங்குகொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்தக் கூட்டத்தை இம்மாதம் 15-ந் தேதிக்கு மேல் ஒரு நாளில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications