உடுமலை தலித் இளைஞர் படுகொலை: பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் சரண்
திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் நேற்று தலித் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கவுசல்யாவின் தந்தை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட கவுசல்யா-சங்கர் காதல் ஜோடிகள் மூன்று பேர் கொண்ட கும்பலால் நேற்று மதியம் நடுரோட்டில் சரமாரி அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலில் இளைஞர் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார், கவுசல்யா தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த படுகொலை சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. நாடுமுழுவதும் பிரபல ஊடகங்களில் வெளியானதால் இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட கவுசல்யா, சங்கர் தம்பதியினருக்கு கடந்த சிலவாரங்களாகவே கொலை மிரட்டல் வந்து கொண்டிருந்தது. பெண்ணின் உறவினர்கள் நேரடியாக சென்று பத்து லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும், சங்கரை விட்டு விட்டு வந்து விடுமாறும் அழைத்துள்ளனர். அதற்கு கவுசல்யா மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் எப்படி வாழ்ந்து விடுவீர்கள் என்று பார்க்கலாம் என்றும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர்.
சங்கரின் உடலுக்கு கோவை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை தொடங்கியது. இதனை நிறுத்தக்கோரியும், மரணத்திற்கு நியாயம் கோரியும் உறவினர்கள் போராட்டம் நடத்தியால் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
சங்கரை வெட்டி கொலை செய்த கும்பலை திருப்பூர் மாவட்ட போலீசார், தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், இந்த கவுரவக் கொலையில் தொடர்புடைய கவுசல்யாவின் தந்தை சின்னசாமி நிலக்கோட்டை நீதிமனறத்தில் ஆஜராகியுள்ளார். தம்பதிகளை அரிவாளால் வெட்டிய கும்பல் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமறைவாக உள்ள பெண்ணின் தாய்மாமனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications