கூவத்தூரில் அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் 3 மணிநேரம் பேரம் பேசிய சசிகலா!
சிறைவைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து தப்பி ஓட முயற்சித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா நேரடியாக கூவத்தூர் சென்று அதிருப்தியாளர்களிடம் 3 மணிநேரம் பேரம் பேசிவிட்டு திரும்பினா
சென்னை: கூவத்தூரில் சிறைவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் நேரடியாக கூவத்தூர் சென்று அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் 3 மணி நேரம் பேரம் பேசிவிட்டு திரும்பினார் சசிகலா.
அதிமுக எம்.எல்.ஏக்களை சென்னை-புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் என்ற இடத்தில் சிறைவைத்துள்ளது மன்னார்குடி கோஷ்டி. இவர்களில் பெரும்பாலானோர் முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரிக்கும் நிலையில் உள்ளனர்.

இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கூவத்தூரில் சிறைவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்களை விடுவிக்க கோரி போராட்டம் நடத்தினர். சில எம்.எல்.ஏ.க்கள் தப்பி ஓடவும் முயற்சித்தனர்.
இதனை மன்னார்குடி குண்டர்களால் சமாளிக்க முடியவில்லை. இத்தகவல் சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே பதவி கிடைக்காதோ என பதற்றத்தில் வெறித்தனமாக வன்முறையை தூண்டும் வகையில் சசிகலா பேசிவருகிறார்.

அவருக்கு இந்த தகவல் கிடைத்ததும் கடும் அதிர்ச்சியில் உறைந்து போனாராம். இதையடுத்து அந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் நானே பேரம் பேசுகிறேன் என புறப்பட்டு கூவத்தூர் சென்றார் சசிகலா.
அங்கு அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் சசிகலா சுமார் 3 மணிநேரமாக பேரம் பேசிவிட்டு திரும்பினார். சசிகலா சந்தித்த போது பல அதிமுக எம்.எல்.ஏக்கள் முகத்தில் பேயறைந்தவர்களாக காட்சி அளித்தனர்; பலரது முகத்திலும் ஒருவித பீதி இருந்ததை காண முடிந்தது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications