காதலர் தினம்... ஓசூர் ரோஜாக்களுக்கு போட்டியான கென்யா ரோஜாக்கள்... வாடும் விவசாயிகள்
கிருஷ்ணகிரி: கென்யா, எத்தோப்பியா, நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில், மலர் சாகுபடி அதிகமாக உள்ளதால் காதலர் தினத்திற்காக ஒசூரில் இருந்து இந்த ஆண்டு 50 லட்சம் ரோஜக்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு 20 லட்சம் ரோஜாக்கள் குறைவாகவே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்தில் காதலர்கள் தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதில் ரோஜாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாஜ்மஹால், கிராண்ட் காலா, ஒயிட், அவலான்ஜி, ஃபஸ்ட் ரெட், பிங்க் நோபில்ஸ், கார்வெட்டா ஆரஞ்ச், எல்லோ, ஒயிட் போன்ற, முன்னணி ரோஜாக்கள் காதலர் தினத்திற்காகவே ஓசூரில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சீனா மற்றும் கென்யா, எத்தோப்பியா, நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில், மலர் சாகுபடி அதிகமாக உள்ளதால் கடும் போட்டி காரணமாக இந்த ஆண்டு காதலர் தினத்திற்காக ஏற்றுமதியாகும் ஓசூர் ரோஜாக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக கவலை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

ஓசூர் ரோஜாக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர் சுற்று வட்டாரத்தில் உள்ள மண் வளம் மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக ரோஜாக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அதன்படி, ஓசூர் சுற்று வட்டாரத்தில் திறந்த வெளியிலும், பசுமை குடில்கள் அமைத்தும் விவசாயிகள் ரோஜாக்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.

45 வகை ரோஜக்கள்
ஓசூர் பகுதியில் பர்ஸ்ட்ரெட், நொப்ளஸ், கிராண்ட்காலா, தாஜ்மகால், உள்பட 45 வகையான ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் ஓசூர் பகுதியில் இருந்து ஒரு கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
ஓசூரில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் ரோஜாக்கள் அங்கிருந்து விமானம் மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள், ஜெர்மன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஓசூர் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

குறைந்து போன உற்பத்தி
கடந்த காலங்களில் ஒரு கோடி ரோஜாக்கள் ஓசூரில் இருந்து அனுப்பப்பட்டன. அதில் உள்ளூர் தேவை, வெளிமாநிலங்களுக்கு சுமார் 30 லட்சம் ரோஜாக்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளுக்கு 70 லட்சம் ரோஜாக்கள் அனுப்பப்பட்டு வந்தன. அதே நேரத்தில் இந்த ஆண்டு மொத்தமே சுமார் 80 லட்சம் ரோஜாக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

20 லட்சம் குறைவு
அதில் உள்ளூர் சந்தை மற்றும் வெளிமாநில தேவைகளுக்கு சுமார் 30 லட்சம் ரோஜாக்கள் அனுப்பி வைக்கப்படும் நிலையில், வெளிநாடுகளுக்கு சுமார் 50 லட்சம் ஓசூர் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த முறை சுமார் 20 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி குறைந்து விட்டதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

சீனா, கென்யா
ஓசூர் ரோஜாக்களுக்கு முன்பு அதிக அளவில் மவுசு இருந்தது. ஓசூரில் இருந்து காதலர் தினம், புத்தாண்டு மற்றும் சீனா புத்தாண்டு காலங்களில் அதிக அளவில் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், தற்போது உலக சந்தையில் நெதர்லாந்து, கென்யா, சீனா போன்ற நாடுகள் மலர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. கென்யா ரோஜா 16 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதே நேரத்தில் ஓசூர் ரோஜாக்கள் ரூ.20க்கு விற்பனையாகிறது.

விவசாயிகளின் கோரிக்கை
கென்யாவில் இருந்து ஏற்றுமதியாகும் ரோஜாக்கள் விலை குறைவாக கிடைப்பதால், சர்வதேச சந்தையில் ஓசூர் ரோஜாக்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வெளிநாடுகளுக்கு ஓசூர் ரோஜாக்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட தரமான ரோஜாக்கள் உற்பத்தி செய்தாலும், அதை பதப்படுத்திட குளிர்பதன கிடங்கு எங்களுக்கு அமைத்து கொடுக்கவில்லை என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

வாடும் விவசாயிகள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவநிலை மாற்றம் காரணமாக மழை பெய்ததால் செடியின் தனித்தன்மை குறைந்து பூக்களும் பாதிக்கப்பட்டது. தற்போது 20 பூக்கள் கொண்ட ஒரு அட்டைப்பெட்டி உள்ளூர் சந்தையில் ரூ.140 முதல் ரூ.160 வரையிலும், வெளிநாடுகளில் ரூ.160 முதல் ரூ.180 வரையிலும் கிடைக்கிறது. எனவே, காதலர் தினத்தை நம்பி ரோஜாக்கள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications