மோடி அலையை உருவாக்கிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா.. தேர்தலில் உதவியது எப்படி?

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் மூலம் பாஜக எப்படி பலன் அடைந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மோடியின் வெற்றிக்கு அனாலிட்டிக்கா நிறுவனம் உதவியது எப்படி?- வீடியோ

    சென்னை: கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் மூலம் பாஜக எப்படி பலன் அடைந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பாஜகவிற்கு நாங்கள் உதவினோம் என்று கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்திய கிளையான 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனம் ஒப்புக்கொண்டு இருக்கிறது.

    இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

    கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    யாரெல்லாம் சந்தாதாரர்கள்

    யாரெல்லாம் சந்தாதாரர்கள்

    இவர்களுக்கு இந்தியாவில் பாஜகதான் மிக முக்கியமான சந்தாதாரர்களாக இருக்கிறார்கள். ஏர்டெல் நிறுவனம் தங்கள் விளம்பரத்திற்கு இவர்களை பயன்படுத்தி இருக்கிறது. காங்கிரஸும் இவர்களின் வாடிக்கையாளர்கள்தான் என்று பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி கூட இவர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கிறது என்றுள்ளார்.

    உதவி

    உதவி

    பாஜகவின் 4 தேர்தல் வெற்றிக்கு பின் இவர்கள் இருக்கிறார்கள். உத்தர பிரதேச தேர்தல் வெற்றி, நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, குஜராத் தேர்தல் வெற்றி, திரிபுரா போன்ற சில சிறிய மாநிலங்களின் தேர்தல் வெற்றி என எல்லாவற்றிற்கும் பின் இவர்கள்தான் இருக்கிறார்கள். இவர்களிடம் பாஜக பணம் கொடுத்து பேஸ்புக்கில் அவர்களுக்கு சாதகமான செய்திகளை பரப்ப வைத்துள்ளது.

    பப்புவுக்கு பின்

    பப்புவுக்கு பின்

    ராகுல் காந்தியை 'பப்பு' என கிண்டல் செய்யும் வழக்கத்தை உருவாக்கியவர்கள் இவர்கள்தான் என்று கூறப்படுகிறது. ராகுல் காந்தி செய்யும் சிறு சிறு தகவல்களை பெரிதாக்கி, வீடியோவாக வெளியிட்டு, அதை பேஸ்புக்கில் வைரலாக வர செய்து, அவர் மீது இருக்கும் மக்களின் நிலைப்பாட்டை மொத்தமாக மாற்றுவது இவர்களின் முதல் பணியாக இருந்துள்ளது.

    மோடி அலையை உருவாக்கினார்கள்

    மோடி அலையை உருவாக்கினார்கள்

    அதேபோல் இந்தியா முழுக்க மோடி அலையை உருவாக்கியவர்கள் இவர்கள்தான் என்று கூறப்படுகிறது. மோடியை ரட்சகன் போல காட்டி, நிறைய கட்டுரைகளை பேஸ்புக்கில் விளம்பரங்கள் மூலம் பரப்பி இருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தல் வாசகமான ''ஆப் கி பார் மோடி சர்க்காரை'' வைரலாக்கியது இவர்கள்தான் என்று கூறப்படுகிறது.

    அகண்ட பாரத கனவு

    அகண்ட பாரத கனவு

    'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவன செயல்பாடுதான் அகண்ட பாரத கனவிற்கு உதவி இருக்கிறது. இந்தியாவின் ஏதாவது ஒரு விஷயம் வைரல் ஆகும் போது, அதை மறைக்க காஷ்மீர் பிரச்சனை, மாட்டுக்கறி என்று வேறு விஷயங்களை வைரலாகி மக்களை திசை திருப்புவது இவர்கள்தான் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பா என பல நாடுகளில் அவர்கள் இந்த பணியை செய்துள்ளார்கள்.

    மாடல்

    மாடல்

    குஜராத் மாடல் என்ற வலுவான பிரச்சாரத்தை இவர்கள்தான் உருவாக்கினார்கள். மோடி குறித்து 6 வருடங்களுக்கு முன் கூகுளில் சர்ச் செய்தால், ரயில் எரிப்பு சம்பவம் மட்டுமே வரும். ஆனால் அதை மாற்றி குஜராத் மாடல் என்பதை போலியாக வைரலாக்கி அதை கூகுளில் முதல் முடிவாக வரவைத்து இருக்கிறார்கள் 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தை சேர்ந்தவர்கள். இது தேர்தலில் பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

    யோகி ஆதித்யநாத்

    யோகி ஆதித்யநாத்

    இந்த நிறுவனம் உத்தர பிரதேச தேர்தலிலும் அதிக பங்கு வகித்து இருக்கிறது. பாபர் மசூதி இடிப்பு என்பதை மாற்றி, ராமர் கோவில் காட்டுவோம் என்பதை முன்னிலை படுத்தியது இவர்கள்தான். அங்கு ராமர் கோவில் இருந்தது என்று கூறும் கட்டுரைகளை, உத்தர பிரதேச பேஸ்புக் பயனாளர்களின் பக்கங்களில் விளம்பரங்கள் மூலம் ஹிந்தியில் வரவைத்துள்ளார்கள். இது அம்மாநில தேர்தல் முடிவை மாற்றியுள்ளது.

    யார் தலைவர்

    யார் தலைவர்

    கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன இந்திய கிளையான 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தை ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த அம்ரீஷ் தியாகி நிர்வகித்து வருகிறார். ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் இந்த நிறுவனம் உதவி இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் யாருடன் எல்லாம் இவர்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகவில்லை.

    திட்டம்

    திட்டம்

    இவர்களின் அடுத்த திட்டம் 2019 தேர்தல் என்று கூறப்படுகிறது. இதுவரை இவர்கள் தேர்தல் முடிவுகளை 90 சதவிகிதம் மாற்றியுள்ளதாக அவர்கள் இணையத்தில் மார் தட்டி இருக்கிறார்கள். 2019 தேர்தலுக்காக, கடந்த 5 வருட ஆட்சியின் சாதகங்களை மட்டும் பேஸ்புக்கில் கொண்டு சேர்க்கும்படி இந்த நிறுவனத்திற்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+