தமிழர்களின் வலி, வரலாறு உணராத ரஜினி எங்களை வழி நடத்த முடியுமா?... கேட்கிறார் சீமான்

தமிழரின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, முன்னோர்கள் எதையும் அறியாத நடிகர் ரஜினிகாந்த் எப்படி எங்களை வழிநடத்த முடியும்? என்று நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சீமான், ரஜினியை வேண்டாம் என சொல்ல இவ்வளவு காரணமா?- வீடியோ

    சென்னை: நாட்டை ஆள்பவர் நல்லவர் கெட்டவர் என்பதல்ல... உரிமைதான் முக்கியம் என்று நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழர்களின் வரலாறு, வலி எதையும் அறியாத ரஜினிகாந்த் எப்படி எங்களை வழிநடத்த முடியும்? என்றும் கேட்டுள்ளார்.

    நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினிகாந்த் தான் ஒரு
    பச்சைத்தமிழன் என்பதை கர்நாடகாவிலோ, மராத்தியிலோ போய் பதிவு செய்வாரா? என்று கேட்டுள்ளார்.

    ரஜினியை தமிழராக ஏற்க முடியாது என்பதற்கான காரணம், மாந்தோப்பில் இருக்கிறது என்பதற்காக பலாமரத்தை மாமரமாக ஏற்க முடியுமா என்று கேட்டுள்ளார்.

    தமிழர்தான் ஆள வேண்டும்

    தமிழர்தான் ஆள வேண்டும்

    ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் வசிக்கிறார் என்பதற்காக தமிழராக ஏற்க முடியாது. நல்லவர் என்பதற்காக வெள்ளைக்காரரை நாட்டை ஆள விட முடியுமா?. நல்லவர் கெட்டவர் என்பதல்ல உரிமைதான் முக்கியம்.

    சோனியாவை விடலையே

    சோனியாவை விடலையே

    ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்பது கூறும் போது சோனியா காந்தியை ஆள விடவில்லையே. அறம் சார்ந்து ஆட்சி செய்தவர்கள் தமிழர்கள். தமிழகர்கள் எந்த நிலத்தையும் அடிமைப்படுத்தவில்லை.

    குரல் கொடுக்கலையே

    குரல் கொடுக்கலையே

    ரஜினி நல்லவர் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். எதை வைத்து ரஜினியை நல்லவர் என்று கூறுகிறீர்கள். துயரப்படும் மக்களின் கண்ணீரை துடைக்க கை நீட்டவில்லையே. ரஜினி எந்த ஒரு விசயத்திற்காகவும் தமிழக மக்களுக்காக போராடவில்லை.

    மக்களின் வலி தெரியுமா?

    மக்களின் வலி தெரியுமா?

    பிரச்சினைகளுக்கு போராடாமல் தேர்தலில் நிற்கலாமா? வலியை உணராத ஒருவர் எப்படி தலைவராக வர முடியும். மீனவர்களின் துயரத்தில் பங்கேற்கவில்லை. ஆந்திராவில் மரம் வெட்டியவர்களை சுட்டுக்கொன்றனர். அதற்காக குரல் கொடுக்கவில்லை. வலியை உணராத நபர் எப்படி வழி நடத்த முடியும்.

    தமிழர்கள் பண்பாடு அறிவாரா?

    தமிழர்கள் பண்பாடு அறிவாரா?

    தமிழின் தொன்மை, ஆழம், கலை, இலக்கிய பண்பாடு, வரலாறு அறியாதவர் ரஜினி. மூவேந்தர்கள் பற்றி அறியாதவர், தமிழர்களின் வரலாறு பற்றி எதுவுமே தெரியாதவர் எப்படி எங்களை வழி நடத்த முடியும்.

    கொள்கை அறியாதவர்

    கொள்கை அறியாதவர்

    கொள்ளையை கேட்டாங்க ஆடிப்போயிட்டேன் என்று கூறுபவர் எப்படி இதை எல்லாம் தெரிந்து கொள்ள முடியும். கொள்கைதான் வழி நடத்த முடியுமே தவிர, தனி மனித புகழ் வெளிச்சம் எப்படி வழி நடத்த முடியும் என்று கேட்கிறார் சீமான்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+