For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாதிக் அலி தீர்ப்பை தேர்தல் ஆணையம் மேற்கோள் காட்டியது ஏன்? அந்த தீர்ப்பின் முக்கியத்துவம் என்ன?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    சாதிக் அலி தீர்ப்பை தேர்தல் ஆணையம் மேற்கோள் காட்டியது ஏன்?- வீடியோ

    சென்னை: சாதிக் அலி தீர்ப்பு அடிப்படையில் இரட்டை இலை சின்னம் மதுசூதனன் அணிக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தேரதல் ஆணையம் அறிவித்துள்ளது.

    1969ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி உடைந்த போது உச்சநீதிமன்ற நீதிபதி சாதிக் அலி அளித்த தீர்ப்புதான் இப்போது தேர்தல் ஆணையத்தால் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.

    பெரும்பாலான வழக்குகளில் இந்த தீர்ப்பு மேற்கோள் காட்டப்படுகிறது. அப்படி அந்த தீர்ப்பில் என்ன கூறப்பட்டது, எந்த அடிப்படையில் அந்த தீர்ப்பு அமைத்தது என்பதை பார்க்கலாம்.

    காங்கிரசில் மோதல்

    காங்கிரசில் மோதல்

    1969ல் காங்கிரஸ் கட்சியில் இரண்டு அணிகள் உருவாகி, சின்னத்துக்காக தேர்தல் கமிஷனிடம் முறையிட்டன. அப்போது காங்கிரஸ் கட்சியின் சின்னமாக 'இரட்டைக் காளைமாடு' இருந்தது. இந்திரா காந்தியும், ஜெகஜீவன் ராமும் எதிரெதிரே கோஷ்டியாக பிரிந்து சின்னத்தை கேட்டனர்.

    இந்திரா காந்தி வெற்றி

    இந்திரா காந்தி வெற்றி

    மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு அதிகமாக இருந்ததால் ஜெகஜீவன் ராமுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் சின்னம் கொடுக்கப்பட்டது. இதனால், அடுத்து வந்த தேர்தலில், 'பசுவும் கன்றும்' சின்னத்தில் இந்திராகாந்தி தரப்பு போட்டியிட்டது. ஆனால் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    பொதுக்குழு உறுப்பினர்கள்

    பொதுக்குழு உறுப்பினர்கள்

    கட்சி சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு சென்றபோது, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு அதிகம் இருக்கிறது என்பதை வைத்து நீதிபதி சாதிக் அலி வழங்கிய தீர்ப்பு அது. இப்போதும், அதிமுகவில் மனுதாரர்கள் அணிக்கு ஆதரவாக 1877 உறுப்பினர்கள் உறுதி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர்.

    இரட்டை இலை

    இரட்டை இலை

    அதேபோல மதுசூதனன் அணிக்கு, 34 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 8 மாநிலங்களவை உறுப்பினர்களும், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 115 இருக்கிறார்கள். அதனால், இரட்டை சிலை சின்னத்தை இ. மதுசூதனன், ஓ. பன்னீர்செல்வம், மற்றும் எஸ். செம்மலை அணிக்கு ஒதுக்குவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Sasikala's camp had argued that the present case of the AIADMK greatly differs from the Sadiq Ali case decided by the Supreme Court, which was cited by the rival faction as the benchmark.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X