அடிச்சு தூக்கிய எடப்பாடி.. டெல்லியில் ‘பாசிட்டிவ் சைன்’ கிடைக்க காரணம் இந்த 4 விஷயங்கள் தானாம்!
சென்னை : அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ள தேர்தல் ஆணையம், 4 விஷயங்களை கருத்தில் கொண்டு பரிசீலித்ததாக தெரிவித்துள்ளது. இந்த 4 விஷயங்கள் தான் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தியுள்ளன.
அதிமுகவில் இரட்டைத் தலைமையாக செயல்பட்டு வந்த ஈபிஎஸ் , ஓபிஎஸ் இடையே கடந்தாண்டு ஜூன் மாதம் பிளவு ஏற்பட்டது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஈபிஎஸ் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ்சையும் கட்சியின் அடிப்படை பதவியிலிருந்து ஈபிஎஸ் நீக்கினார்.
இதனைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பல்வேறு கட்ட தீர்ப்புகள் வெளியான நிலையில், சமீபத்தில் பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்றும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் முடிவு :இந்நிலையில், அதிமுகவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், 10 நாட்களில் முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. இதை கருத்தில்கொண்டு தேர்தல் கமிஷன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான அதிகாரிகள். இது தொடர்பாக ஆலோசித்தனர். இதில் கட்சி அங்கீகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
எடப்பாடிக்கு அங்கீகாரம் : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடகாவில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதங்கள், நீதிமன்ற உத்தரவுகள் ஆகியவற்றை ரெஃபரன்ஸாக கொண்டு பரிசீலித்து இந்த முடிவை எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் தாங்கள் பரிசீலித்ததாக குறிப்பிட்ட 4 ஆவணங்கள் இவைதான்:

4 விஷயங்கள் : 1. எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதங்கள்.
A. பொதுக்குழு தீர்மானங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதையடுத்து, பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரிக்கும்படி எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதம்.
B. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதம்.
2. சென்னை உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதி கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி அளித்த தீர்ப்பு.
3. டெல்லி ஐகோர்ட் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி பிறப்பித்த ஆணை.
4. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.
இந்த கடிதங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications