2 மாநில ஆளுநர் பதவி கிடைத்தது எப்படி? “மகாபெரியவர் கொடுத்த மாங்கனி” - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!
திருவாரூர் : தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனக்கு 2 மாநில ஆளுநர் பதவி கிடைத்ததற்கு மகாபெரியவர் அளித்த மாங்கனியே காரணம் என்கிற ரீதியில் பேசியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு திருவாரூர் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் இசை விழாவை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

பின்னர் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "கல்யாணி, சஹானா ஆகிய ராகங்களைப் பாடிக்கொண்டே இருந்தால் வெகுவிரைவில் நோயாளிகள் குணமடைந்து விடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல காசநோயை குணப்படுத்தவும் ராகம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஜாய்ஜலவந்தி ராகத்தைக் கேட்டுக்கொண்டிருந்தால் காசநோய் குணமாகிறது என்று சொல்கிறார்கள்.
என்னையும், எனது கணவரையும் அழைத்து மகாபெரியவர் கையில் மாங்கனிகளைக் கொடுத்தார். அந்த மாங்கனி தான் இரண்டு மாநில ஆளுநராக பரிணமித்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்" எனப் பேசியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள், ஆளுநர் முதல்வர் உறவு குறித்து கேள்வியை முன்வைத்தனர். அதற்கு தமிழிசை, "முதல்வர்கள் நடந்து கொள்ளக் கூடிய விதத்தைப் பொறுத்துதான் அது அமைகிறது. தெலுங்கானா முதல்வர் எந்தவித புரோட்டோகாலையும் சரிவர பயன்படுத்துவதில்லை. ஆளுநரை மதிப்பதில்லை. என்னை பொறுத்தவரையில் எல்லாம் அரசியல் ஆக்கப்படுவது போல ஆளுநரும் அரசியல் ஆக்கப்படுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications