நித்யாவின் நினைவெல்லாம் கருணாநிதி!
கருணலாநிதியின் நிழல் நித்யா இப்போது எப்படி இருக்கிறார்?
Recommended Video

சென்னை: கருணாநிதியின் நிழல் என்று சொல்லப்பட்ட உதவியாளர் நித்யா இப்போது எப்படி இருக்கிறார்?
கருணாநிதிக்கு முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்தபோது கூடவே இருந்து கவனித்து கொண்டவர் நித்யா. அதிலிருந்து நட்புடன் கலந்த சினேக பாசம் கருணாநிதி-நித்யா என இருவரிடமும் அட்டை போல ஒட்டிக் கொண்டது. கருணாநிதியின் பெர்சனல் பிஏ-வாக மட்டும் இல்லாமல், அவரது நிழல், அவரது சிநேகிதன், ஏன் கருணாநிதியின் செல்போன், என எல்லாமுமாகி விட்டார் நித்யா.

உப்பிட்ட நித்யா
நித்யாவின் அபரிமிதமான அன்பின் செயல்பாடுகளால் கருணாநிதிக்கு அவர் மீது பிடிப்பு மேலோங்கியது. நெருக்கம் கூடியது. நித்யாவை பற்றி தனது டைரியிலேயே குறிப்பிட்டு எழுதி வைத்துள்ளார். கருணாநிதியை குடும்ப உறுப்பினர்கள் உப்பிட்டு அஞ்சலி செலுத்தியபோது நித்யாவும் உப்பிட்டு அஞ்சலி செலுத்தினார். ரத்த பந்தங்கள் கைப்பிடி மண்ணை அள்ளி போட்டபோதும், நித்யாவும் மண்ணை அள்ளி குழியில் போட்டார்.

வெறுமையான நித்யா
கருணாநிதியுடன் தன் 24 மணி நேரமும் ஒட்டியும், உறவாடியும், மகிழ்ந்தும், புகழ்ந்தும், நெருங்கியும் வந்த நித்யா இப்போது எப்படி இருக்கிறார்? கருணாநிதியின் மரணத்திலிருந்து இன்னமும் நித்யா மீளவில்லை. யார் வந்து ஆறுதல் கூறினாலும் துக்கம் தொண்டையை அடைத்து கொண்டு நாட்களை கழித்து வருகிறார். கருணாநிதி இல்லாத இந்த உலகம் நித்யாவுக்கு வெறுமையாகவே உள்ளது.

அசைபோட்டு வருகிறார்
அதனால்தான் கோபாலபுர வீட்டுக்கு தினமும் 2 முறை சென்று வருகிறார். அந்த வீட்டில் எங்கு பார்த்தாலும் கருணாநிதியின் உருவம் இருப்பது போலவே நினைத்து கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறார். மாலைப்பொழுதில் கருணாநிதி சமாதிக்கு சென்று உட்கார்ந்து விடுகிறார். கருணாநிதியுடன் எப்போதுமே கூடவே இருந்து கவனித்தபோதெல்லாம் எழுந்த நினைவுகளை கண்களில் நீர் வழிய அசைபோட்டவாறே உட்கார்ந்திருக்கிறார். இப்படியே கோபாலபுரத்துக்கும், சமாதிக்கும் சென்று கொண்டிருக்கிறார்.

கனக்கும் இதயம்
நினைவு நெஞ்சை இன்னமும் கனக்கத்தான் வைத்துள்ளது. கண்ணீரை நாள் முழுவதும் தோற்றுவித்து கொண்டுதான் உள்ளது. மனம் முழுதும் பழைய சம்பவங்களை அசைப்போட்டே கசப்பான நொடிகளை கழித்து வருகிறார். வரும் எதிர்காலத்தின் கோடி நிமிடங்களும் வலியுடனேதான் நித்யாவுக்கு பயணிக்கும். மீளா துயரிலிருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் மூழ்கி கொண்டே இருக்கிறார் நித்யா!!
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications