For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடல்நலம் தேறிய ஜெ.வுக்கு மாரடைப்பு வரவைத்த அந்த பயங்கர சம்பவம்... அப்பல்லோ 'பகீர்'

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமான மாரடைப்பின் பின்னணி பற்றி பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் நன்றாக உடல்நலம் தேறிய ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு "வரவழைக்கப்பட்டது"; அதனாலேயே மரணமடைந்தார் என அதிர வைக்கும் பகீர் தகவல்களை விரைவில் வெளியிட இருக்கிறது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணி தரப்பு.

ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக ஒவ்வொரு அணுகுண்டாக வீசி வருகிறது ஓபிஎஸ் தரப்பு. அண்மையில்கூட குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவரான முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் கூறியிருந்தார்.

அப்போது, ஜெயலலிதாவின் மூச்சு நிறுத்தப்பட்டது என்ற பொருளில் அப்பல்லோ மருத்துவமனை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது எனவும் பகிரங்கப்படுத்தினார் பிஎச் பாண்டியன். அப்பல்லோ மர்மங்கள் படுபயங்கரமாக இருக்கிறதே என ஓபிஎஸ் அணி தரப்பில் நாம் விசாரித்தா நினைத்துக் கூட பார்க்க முடியாத அதிர்ச்சிகள் அரங்கேறியிருக்கிறது.

அந்த ஒரு சம்பவம்

அந்த ஒரு சம்பவம்

அப்பல்லோவில் அரங்கேறிய அந்த சில சம்பவங்கள் மட்டுமே ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட காரணம் என உறுதியோடு சொல்கிறது ஓபிஎஸ் அணி தரப்பு. ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வந்த நிலையில் டிசம்பர் 4-ந் தேதியன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக ஒரு சம்பவம் நடந்ததாம்.

பேசமட்டும் முடியாது

பேசமட்டும் முடியாது

ஜெயலலிதாவின் உடல்நிலை நன்கு தேறிவந்த போதும் டிரக்கியாஸ்டமி பொருத்தப்பட்டதால் அவரால் பேச முடியாத நிலை. அதே நேரத்தில் தம்மை சுற்றி நடப்பவை; தம்மிடம் என்ன கேட்கப்படுகிறது என்பதை உணரக் கூடியவராகவே இருந்திருக்கிறார்.

வேண்டாம் என கூறிய ஜெ.

வேண்டாம் என கூறிய ஜெ.

ஜெயலலிதாவை அப்போது சந்தித்த ஒரு நபர், டிசம்பர் 4-ந் தேதி மாலை வழக்கம் போல சில விஷயங்களை மெல்ல கூறியிருக்கிறார். ஆனால் ஜெயலலிதாவோ பெரும்பாலானவற்றுக்கு வேண்டாம் என தலையாட்டினாராம்.

அரசியல் வாரிசு நானே...

அரசியல் வாரிசு நானே...

ஒரு கட்டத்தில் என்னை உங்கள் அரசியல் வாரிசாக அறிவித்தே ஆக வேண்டும்; வேறவழியே இல்லை என கடுமை காட்டினாராம் அந்த நபர். இதை ஜெயலலிதா சற்றும் எதிர்பாராத நிலையில் உடனிருந்த நபரின் கோபமும் ஆவேசமும் ஜெயலலிதாவை ரொம்பவே கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்ததாம்.

ஆவேசத்தால் அட்டாக்

ஆவேசத்தால் அட்டாக்

இந்த சப்தத்தைக் கேட்டு மருத்துவர்கள் ஓடி வந்திருக்கின்றனர். மருத்துவர்கள் உடன் இருப்பதையும் பொருட்படுத்தாமல் தாம் நினைத்ததை சாதிக்க வேண்டும் என ஆவேசத்துடனே அந்த நபர் பேசியிருக்கிறார். அப்போதுதான் திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாம்.

மறைந்ததாக அறிவிப்பு

மறைந்ததாக அறிவிப்பு

அதன் பின்னர் உடனடியாக அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு 24 மணிநேரம் கண்காணிப்பில் இருக்க வேண்டும்; இந்த நிலையில் ஜெயலலிதாவின் உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் அவர் மறைந்ததாக 'அறிவிப்பு' வெளியிடப்பட்டதாம்.

அந்த வீடியோவுக்கு பதில் சொல்லட்டும்

அந்த வீடியோவுக்கு பதில் சொல்லட்டும்

இதற்கு ஆதாரமாக ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவில் சில காட்சிகள் இருக்கிறதாம். இவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ஆதாரங்களுடன் விரைவில் அணுகுண்டாகவே வீசுவோம் என ஆணித்தரமாக சொல்கிறது ஓபிஎஸ் அணி தரப்பு.

English summary
Sources said that Team OPS will reveal more shocking details including the reason for Jayalalitha's sudden cardiac arrest very soon,.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X