நித்தம் நித்தம் ஒரு கணக்கு... எடப்பாடிக்கு எத்தனை பேர்தான் ஆதரவு? என்னதான் செய்கிறார் ஆளுநர்?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரிக்கிறார்கள் என்கிற குழப்பம் தொடரவே செய்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டிய ஆளுநரோ அதிமுகவின் உட்கட்சி பூசல் என ஒதுங்குவது சரிதானா? என்பது அரசியல் பார்வையாளர்கள் கேள்வி.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை என அதிகாரப்பூர்வமாக 19 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆளுநருக்கு கடிதம் கொடுத்தனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான எம்.எல்.ஏக்கள் ஆதரவு 106 என்பதுதான்.

பெரும்பான்மைக்கு தேவையானது 117 எம்.எல்.ஏக்கள். ஆகையால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை இழந்துவிட்டார். இதனடிப்படையில் எதிர்க்கட்சிகள், எடப்பாடியார் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன.

எதியூரப்பா விவகாரம்

எதியூரப்பா விவகாரம்

கர்நாடகாவில் எதியூரப்பா மீது நம்பிக்கை இல்லை என எம்.எல்.ஏக்கள் கூறியபோது பெரும்பான்மையை 2 முறை நிரூபிக்க உத்தரவிட்டார் அப்போதைய ஆளுநர் பரத்வாஜ். ஆனால் தமிழகத்தின் ஆளுநர் வித்யாசாகர் ராவோ, வெறும் ஆளும் கட்சியின் உட் பிரச்சனை என கையைவிரிக்கிறார்.

கிறுக்க பிடிக்க வைக்கும் கணக்கு

கிறுக்க பிடிக்க வைக்கும் கணக்கு

அதோடு கதை முடியவில்லை. ஒவ்வொரு நாளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் அவரை எதிர்க்கும் தினகரன் அணியும் சொல்லி வரும் எம்.எல்.ஏக்கள் கணக்கு தமிழக மக்களை கிறுக்குப் பிடிக்க வைக்கிறது. உதாரணமாக இன்று நடந்ததை மட்டும் பார்ப்போம்.

20 எம்.எல்.ஏக்களா? 35 எம்.எல்.ஏக்களா?

20 எம்.எல்.ஏக்களா? 35 எம்.எல்.ஏக்களா?

புதுச்சேரியில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், சொகுசு ரிசார்ட்டில் 20 பேர் இருக்கிறார்கள். எண்ணிக் கொள்ளுங்கள் என்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் எம்.எல்.ஏ, எங்களுக்கு 35 பேர் ஆதரவு இருக்கிறது பாருங்கள் என்றார்.

இங்கிட்டு 112 எம்.எல்.ஏக்கள்

இங்கிட்டு 112 எம்.எல்.ஏக்கள்

இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 111 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். பேராவூரணி எம்.எல்.ஏ.வுக்கு உடல்நலம் சரியில்லை என விளக்கம் கொடுத்திருக்கிறார் என்றார். இதனடிப்படையில் பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு 112 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என புரிந்து கொள்ள முடியும்.

என்னது மேலும் 12 பேரா?

என்னது மேலும் 12 பேரா?

அத்துடன் விட்டுவிடவில்லை ஜெயக்குமார். தினகரன் முகாமில் இருக்கும் 9 பேர், முதல்வர் எடப்பாடியை தொடர்பு கொண்டு உங்கள் முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்றனர். அதேபோல் கூட்டணி கட்சியின் 3 எம்.எல்.ஏக்களும் முதல்வரை தொடர்பு கொண்டு முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறியுள்ளனர் என்றார். ஆக ஜெயக்குமாரின் "இன்றைய" கணக்குப்படி 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறது.

அப்ப அங்கிட்டு?

அப்ப அங்கிட்டு?

அப்படியானால் புதுவையில் இருக்கும் 20 பேர் உண்மையிலேயே தினகரன் ஆதரவாளர்களா? மிரட்டி அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனரா? என்கிற கேள்வியும் எழுகிறது. இப்படி ஒரு அசாதாரண குழப்ப சூழ்நிலையை பொதுமக்கள் தலைமையில் சுமத்திவிட்டு தீர்வு காண வேண்டிய ஆளுநர் என்னதான் செய்கிறார்? என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் எளிதான கேள்வி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+