Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு

பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு செவ்வாய்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நோன்பு இருக்கும் பெண்களின் ஆயுள் பலம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை

காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்.

மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் சரடானது பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும்கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும்.

தீர்க்க சுமங்கலியா இருப்பதற்கும் விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள். கணவரின் முகத்தை பார்த்துக்கொண்டே பூவோடும் பொட்டோடும் ஆயுள் முழுவதும் இருக்க நினைப்பார்கள். மாங்கல்ய பலத்துடன் அது சரி! ஓரு பெண் தீர்க சுமங்கலியா இருக்க ஜாதகத்தில் எந்த மாதிரி கிரக நிலை இருக்கனும்?

1. கணவன் மனைவி இருவர் ஜாதகத்திலும் லக்னம் பலம் பெற்று மனைவியை குறிக்கும் சுக்கிரனும் கணவனை குறிக்கும் மங்களன் எனும் செவ்வாயும் நல்ல நிலையில் ஆட்சி உச்சம் மூல திரிகோன பலம் மற்றும் திக் பலம் பெற்று இருக்க வேண்டும்.

2.பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் ஏழாமிடத்தோடு தொடர்பு கொண்டிருக்க கூடாது. ஏழாமிடம் சுத்தம் நன்மை பயக்கும்.

3.ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் செவ்வாய் அசுபர்களுடன் சேர்ந்து லக்னம்,குடும்பம்,சுகம், களத்திரம், ஆயுள் மற்றும் மாங்கல்யம், அயன சயன சுகம் ஆகிய வீடுகளில் தொடர்பு பெறகூடாது.

4. எட்டு மற்றும் பனிரெண்டாம் வீடுகளில் ராகு தொடர்பு கொள்ள கூடாது.

5.பலமிழந்த நீச சந்திரன் 6/8 வீடுகளில் தொடர்பு பெறாமல் இருக்க வேண்டும்.

6.அசுப கிரகங்கள் உச்சம் பெற்று எட்டாமிடத்தில் நிற்க கூடாது.

7. செவ்வாயும் ராகுவும் அல்லது செவ்வாயும் சனியும் சேர்க்கை பெற்று 7/8ம் வீடுகளில் நிற்க்க கூடாது. இவற்றோடு ரஜ்ஜு பொருத்தம் இருக்க வேண்டும்.

ரஜ்ஜு பொருத்தம் எதற்காக பார்ப்பது?

ரஜ்ஜு பொருத்தம் எதற்காக பார்ப்பது?

இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்த பொருத்தம் குறிக்கிறது. திருமண பந்தத்திற்கு இந்த பொருத்தம் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

ரஜ்ஜுப் பொருத்தம் என்பது 10 விதப் நட்சத்திரப் பொருத்தங்களில் ரஜ்ஜுப் பொருத்தமே சிறப்புடையதாக கருதப்படுகிறது. இப்பொருத்தம் பார்ப்பது எதற்காக எனில் மனைவி கணவனுடன் நீண்ட காலம் சந்தோஷமாக வாழும், பாக்கியத்தை அதாவது நீண்ட காலம் வாழும் ஆயுளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. மற்றும் எதனையெல்லாம் பாதிக்கும் என்பதனை இங்கு காணலாம்.

தீர்க்க சுமங்கலி பாக்கியம்

தீர்க்க சுமங்கலி பாக்கியம்

ஆண் பெண் இருவரும் ஒரே திசையில் பிறந்திருக்க கூடாது என்பது இப்பொருத்தத்தின் சூட்சுமம் ஆகும். இருவரின் ஆயுள் மற்றும் குடும்ப மகிழ்ச்சியையும் இது குறிப்பிடுகிறது.
எங்களுக்கெல்லாம் எந்த ரஜ்ஜுவும் பார்க்கவில்லை.

ஏதோ மனதிற்க்கு பிடித்தது. திருமணம் செய்துக்கொண்டோம். எங்களுக்கெல்லாம் தீர்க சுமங்கலி பாக்கியம் உண்டாண்ணு சிலர் கேட்பது காதில் விழுகிறது.அவர்களெல்லோரும் செவ்வாய்கிழமை காரடையான் நோன்பு இருப்பதுதான் சிறந்த வழி.

காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு

மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும்.

சத்தியவான் சாவித்ரி

சத்தியவான் சாவித்ரி

மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி. மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள். அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள்.

எமதர்மராஜன்

எமதர்மராஜன்

சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்பு கிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள்.

சாவித்ரியின் சமயோஜிதம்

சாவித்ரியின் சமயோஜிதம்

இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார். சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார்.

விரதமுறை

விரதமுறை

மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம். விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, தரையில் சிறிய
கோலமிட வேண்டும். அதன் மீது நுனி வாழை இலை போட்டு, இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையின் ஓரத்தில் வெற்றிலை, பாக்கு,
இரண்டு வாழைப்பழம் வைக்க வேண்டும். அதன் மீதே நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும். அதன் முன் அமர்ந்து, இலையைச் சுற்றி நீர் தெளித்து நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் நோன்பு சரடை பெண்கள் தாங்களாகவே தங்கள் கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். இறைவியர் படங்களுக்குச் சாற்ற வேண்டும். பிரசாதத்தை அனைவரும் உண்ணலாம். காரடையான் நோன்பன்று பெண்கள் மோர் சாப்பிடக் கூடாது.

வரம் தரும் தலங்கள்

வரம் தரும் தலங்கள்

பஞ்ச மங்களத் தலம்" என்று சிறப்பித்துப் போற்றப்படுவது திருமங்கலக்குடி திருத்தலம். ஊரின் பெயர் மங்கலக்குடி, அம்பாள் பெயர் மங்களாம்பிகை. இத்தலத்து இறைவியை வழிபட, திருமணத் தடை நீங்கும்; மாங்கல்ய பலம் நீடிக்கும், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவம். தீர்க சுமங்கலியாக வாழ சுக்கிரனின் அனுக்கிரகம் முக்கியமாகும். எனவே பெண்கள் வருடத்திற்க்கு ஒரு முறையேனும் கணவனுடன் சேரந்து சுக்ர ஸ்தலமான ஸ்ரீரங்க நாச்சியாரை வழிபடுவது மாங்கல்ய தோஷங்களை போக்கி தீர்க சுமங்கலி யோகத்தை தரும். தீர்க சுமங்கலி யோகம் பெற விருத்தாசலத்தில் உள்ள விருத்தாம்பாள் சமேத விருத்தகிரிஸ்வரர் திருக்கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாகும். இங்கு அம்மையும் அப்பனும் வயோதிகர்களாய் அருள் பாலிப்பது சிறப்பு.

மாசியின் சிறப்பு

மாசியின் சிறப்பு

மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் சரடானது பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும்கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்பது ஐதீகம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+