பல லட்சம் அபேஸ்.. மெரினா ஏடிஎம்மில் திருட பீகாரிலிருந்து விமானத்தில் வந்த கொள்ளையர்கள்!
சென்னையில் உள்ள பல ஏடிஎம்களில் கொள்ளையடித்த பீகார் கொள்ளையர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னையில் உள்ள பல ஏடிஎம்களில் திருடிய பீகார் கொள்ளையர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2 லட்சம் ரூபாய் வரை இதுவரை கொள்ளையிட்டுள்ளனர். ஆனால் இவர்கள் அதற்கும் அதிகமாக திருடி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் மெரினா பகுதியில் இருக்கும் ஏடிஎம்களில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி கொள்ளை போய் உள்ளது. இதுகுறித்து பல முறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பீகாரை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.

போலீஸ் விசாரணை
தொடர் புகாரை அடுத்து இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் இந்த தனிப்படைக்கு தலைமை தாங்கினார். திருவல்லிக்கேணி துணை கமிஷனர் செல்வ நாகரத்தினம் இந்த படைக்கு மேற்பார்வை செய்தார். இவர்கள் தலைமையில் மொத்தம் 9 பேர் கொண்ட குழு விசாரித்தது.

கைது செய்தனர்
இந்த நிலையில் மெரினா எஸ்பிஐ ஏடிஎம் ஒன்றின் பக்கம் சந்தேகப்படும்படி நின்ற இரண்டு பீகார் இளைஞர்களை போலீஸ் கைது செய்தது. அவர்களை விசாரித்ததில் அவர்கள்தான் பணத்தை எல்லாம் திருடியது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் இரண்டு பேர் பீகாரில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் திருடிய பணத்தை எல்லாம் பீகாரில் உள்ள கணக்கு ஒன்றில் போட்டுள்ளனர்.

எப்படி செய்தனர்
இதற்காக அவர்கள் ஏடிஎம் மிஷினை உடைக்கவில்லை. ஹேக் செய்யவில்லை. மாறாக வாடிக்கையாளர்கள் பின் நம்பர் போடுவதை மறைமுகமாக பார்த்துவிட்டு, பின் அவர்கள் சென்றவுடன், அந்த பரிமாற்ற செயல்பாடு முடியாமல் இருக்கும்பட்சத்தில் பணம் எடுத்துள்ளனர். இப்படி யார் எல்லாம் முழுதாக பண பரிமாற்றத்தை முடிக்காமல் செல்கிறார்கள் என்று பார்த்து பார்த்து பணம் திருடி இருக்கிறார்கள்.

விமானத்தில் வந்தனர்
நிறைய பணம் சேர்ந்த பின் இவர்கள் பீகாருக்கு விமானத்தில் சென்றுள்ளனர். இவர்கள் அதன்பின் முழுக்க முழுக்க விமானத்திலேயே பயணம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. சென்னைக்கு கொள்ளையடிக்கவே விமானத்தில் வந்துள்ளனர். இவர்களின் பெயர் முன்னுகுமார், மனோகர்குமார் என்பது தெரிய வந்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications