"குட் ஜாப்".. கண்ணாமூச்சி ஆடிய சிவசங்கர் பாபாவை.. டெல்லியில் வளைத்தது எப்படி.. போலீஸ் மாஸ் ஆபரேஷன்!
சென்னை: டெல்லிக்கு தப்பி ஓடி ஒளிந்திருந்த பாலியல் குற்றவாளி சிவசங்கர் பாபாவை போக்சோ சட்டத்தில் தமிழ்நாடு சிபிசிஐடி இன்று கைது செய்தது. இதற்காக தமிழ்நாடு சிபிசிஐடி மிக சிறப்பான ஆப்ரேஷன் ஒன்றை நடத்தி இருக்கிறது.
Recommended Video
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கும் மாணவிகள், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகாரில்தான் சிவசங்கர் பாபா தேடப்பட்டு வந்தார். அங்கு மாணவிகளிடம் பாலியல் ரீதியாக இவர் அத்துமீறியதாக புகார் வைக்கப்பட்டது.
இவர் மீது அடுத்தடுத்து பல புகார்கள் அளிக்கப்பட்டநிலையில் சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது. அதோடு இதில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்காக உடனே இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது.

கைது
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டிய நிலையில், தான் கண்டிப்பாக கைது செய்யப்படுவோம் என்று தெரிந்ததும் உடனே சிவசங்கர் பாபா டேராடூன் தப்பி சென்றார். அங்கு தனது உடல்நிலை சரியில்லை என்று கூறி, முன் ஜாமீன் வாங்கும் திட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அதற்குள் தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. எஸ். பி விஜயகுமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த புகார்கள் விசாரிக்கப்பட்டது.

டேராடூன்
கேஸ் தனது கைக்கு வந்ததும் வேகமாக ஆக்சனில் இறங்கிய எஸ்பி விஜயகுமார் உடனே தனிப்படை அமைத்தார்., டேராடூனுக்கு சிவசங்கர் பாபாவை பிடிக்க இந்த தனிப்படை அனுப்பப்பட்டது. சிபிசிஐடி டிஎஎஸ்பி குணவர்மன் தலைமையில் ஒரு டீம் இதற்காக நேற்று இரவே டேராடூன் கிளம்பி சென்று, இன்று காலை அங்கு ரீச் ஆனது. ஆனால் போலீஸ் வருவதை எதிர்பார்த்த சிவசங்கர் பாபா, அங்கிருந்து எஸ்கேப் ஆகி ஓடி விட்டார்.

நேபாளம்
இவருக்கு ஏற்கனவே லுக் அவுட் நோட்டிஸ் இருப்பதால் விமான நிலையம் வழியாக எங்கும் செல்ல முடியாது. இதனால் தரை வழியாக இவர் நேபாளம் செல்லும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வந்தன. நேபாளத்தில் இவருக்கு ஆசிரமம் இருப்பதால் அங்குதான் செல்வார் என்று சந்தேகிக்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு சிபிசிஐடிக்கு இது தொடர்பாக முக்கியமான தகவல்கள் சில கிடைத்துள்ளன.

விசாரணை
டெல்லியில் இருக்கும் சில சோர்ஸ்கள் மூலம் சிவசங்கர் பாபா அங்கே வர வாய்ப்புள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவமனையில் நடத்தப்பட்ட விசாரணையிலும், சிவசங்கர் பாபா மருத்துவமனையில் பேசிக்கொண்ட சில விஷயங்களையும் வைத்து அவர் டெல்லிக்குதான் செல்கிறார் என்ற துப்பு துலக்கப்பட்டது. நேபாளம் செல்வது போன்ற பிம்பத்தை ஏற்படுத்திவிட்டு, டெல்லியில் தலைமறைவாகும் திட்டத்தில் பாபா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆக்சன்
இது தொடர்பாக டெல்லி போலீஸ் சோர்ஸ் தங்களுக்கு கிடைத்த தகவல் மூலம் சிபிசிஐடிக்கு உதவி செய்த நிலையில், டெல்லியில் பாபா எங்கே இருக்கிறார் என்ற உறுதியான இடம் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் சில நாட்களுக்கு பின் பாபா பிரஸ் மீட் கொடுக்கும் திட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக தீரன் பட பாணியில் ஓமாவை போலீசார் தேடி செல்வது போல் சிபிசிஐடி போலீசார் டெல்லி சென்று சிவசங்கர் பாபாவை தட்டி தூக்கி உள்ளனர்.

மாற்றம்
கிடைத்த துப்புகளின் அடிப்படையில் சரியான லொகேஷனை கண்டுபிடித்து, அவரை கைது செய்துள்ளனர். கொஞ்சம் உடைகள் மற்றும் தோற்றத்தை மாற்றி பாபா டெல்லியில் தலைமறைவாகி இருக்கிறார். இவரை டெல்லியில் வளைத்த போலீஸ் இன்று மாலையே சென்னைக்கு கொண்டு வர உள்ளது. இவருடன் இருந்த சில உதவியாளர்களும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications