ஹெச்டிஎப்சி வங்கியின் கடன் ,கிரிட்டிட் கார்டு அழைப்புகளில் இருந்து தப்பிப்பது எப்படி?
சென்னை: ஹெச்டிஎப்சி வங்கியின் கடன் ,கிரிட்டிட் கார்டு அழைப்புகள் அடிக்கடி சிலருக்கு வந்து கொண்டிருக்கும். இதை எப்படி தடுப்பது என்பதில் இதில் பார்ப்போம்.
யார் சரியாக கடனை கட்டுகிறார்களோ, யாருக்கு சிபில் ஸ்கோர் சிறப்பாக உள்ளதோ, அவர்களை குறிவைத்து கிரிடிட் கார்டு வாங்குமாறு அழைப்புகள் வரும். தினசரி விடாமல் அழைப்பு வரும். கிரிடிட் கார்டு வேண்டாம் என்றாலும் விடமாட்டார்கள் அப்படிப்பட்ட சூழலில் என்ன செய்வது என்று பலரும் தவிக்கிறார்கள்.
இதேபோல் தான் தனிநபர் கடனும்.. சிபில் ஸ்கோர் சிறப்பாக உள்ளவர்களை குறிவைத்து பர்சனல் லோன் வாங்குமாறு தினசரி எஸ்எம்ஸ்கள், அழைப்புகள் பல்வேறு வங்கி கடன் நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும்.

வங்கியில் பர்சனல் லோன் கடனை வாங்க வைக்க வேண்டும் என்று டார்கெட் உள்ளதால், பாவம் மார்க்கெட்டிங்கில் உள்ளவரும் , சிபில் ஸ்கோர் நன்றாக உள்ளவர்களின் நம்பர்களை எடுத்து அழைக்கிறார்கள். சென்னை மற்றும் தமிழகம் என்று இல்லை, உத்தரப்பிரதேசம், ஹைதரபாத், மும்பை போன்ற பகுதிகளில் இருந்து வங்கி கடனை வாங்குமாறு அழைப்புகள் வருகிறது.
இப்போது ஆன்லைனிலேயே சில நிமிடங்களில் இன்ஸ்டன்ட் ஆக கடன் கொடுப்பதால் வங்கியில் கடன் சார்பான மார்க்கெட்டிங்கில் உள்ளவர்கள், சிபில் ஸ்கோர் நன்றாக உள்ளவர்களின் எண்களுக்கு அழைப்பது வழக்கம். இது தவிர கணிணி வழியான அழைப்புகளும் வரும். முன்பல்லாம் அழைப்புகள் என்றால் தனியான நம்பர்கள்இருக்கும். இப்போது அப்படி இல்லை.. எல்லா நம்பர்களிலும் இருந்து வருகிறது. இதனால் பலரும் நொந்து போகிறார்கள். உண்மையில் கடன்தேவைப்படுவோருக்கு இந்த அழைப்புகள் நல்லது தான்.
எப்படி தடுப்பது: ஆனால் கடனே வேண்டாம் என்று நினைப்போருக்கு ஒரு கட்டத்தில் தொல்லையாக மாறுகிறது. எனவே கடன் அழைப்புகள் மற்றும் கிரிடிட் கார்டு அழைப்புகளில் இருந்து தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான். நீங்கள் 'do not call registration ' செய்ய வேண்டும். எப்படி செய்வது என்றால், ரெம்ப சிம்பிள், உங்கள் செல்போனை எடுங்கள்.
1909 நம்பர்: எந்த செல்போனுக்கு ஓயாமல் கால் வருகிறதோ அந்த செல்போன் எண்ணில் இருந்து 1909 என்ற எண்ணிற்கு FULLY BLOCK என்பதை மெசேஜ் ஆக டைப் செய்து அனுப்புங்கள் .இப்படி அனுப்பிய மறுநிமிடமே உங்களுக்கு தொலைப்பேசி நெட்வொர்க்கில் இருந்து மெசேஜ் வரும். அதில் அடுத்த 24 மணி நேரத்தில் இருந்து எந்த ஒரு விளம்பர காலும், மார்க்கெட்டிங் காலும் வராது என்று இருக்கும்.

ஹெச்டிஎப்சி வங்கி அழைப்பு: சரி ஹெச்டிஎப்சி வங்கியில் இருந்து வரும் கிரிடிட் கார்டு மற்றும் பர்சனல் லோன் அழைப்புகளை எப்படி வராமல் செய்வது என்பதை பார்ப்போம். முதலில் ஹெச்டிஎப்பி வங்கியின் இணையதளத்திற்கு செல்லுங்கள்.அல்லது https://leads.hdfcbank.com/applications/misc/dnc/dnc.aspx?calltype=dnc&AspxAutoDetectCookieSupport=1 என்ற லிங்கில் உள்ளே செல்லுங்கள். அதில் 'do not call registration ' என்று இருக்கும். அதில் உங்கள் பெயர், மொபைல் எண், இமெயில் ஐடி, ஊர் எல்லாவற்றையும் கேட்கும். இறுதியாக கேப்சியாவை டைப் செய்து சப்மிட் கொடுங்கள். அப்படி செய்துவிட்டால் அடுத்த 15 நாட்களுக்குள் ஹெச்டிஎப்சி வங்கி நடவடிக்கையை எடுக்கும்.
15 நாட்கள் அவகாசம்: 15 நாட்களுக்கு பிறகு எந்த மார்க்கெட்டிங் அழைப்பும் உங்களுக்கு ஹெச்டிஎப்சி வங்கியில் இருந்து வராது. ஹெச்டிஎப்சி என்று இல்லை எல்லா தனியார் வங்கியிலும் இது போல் ரிஜிஸ்டர் செய்துவிட்டால் வராது. ஹெச்டிஎப்சி வங்கியில் மட்டும் தான் இதுபோன்று அழைப்புகள் வருவதாக நினைக்க வேண்டாம். எல்லா தனியார் வங்கிகளுமே செய்கின்றன. உதாரணத்திற்காகவே மட்டுமே ஹெச்டிஎப்சி வங்கியை குறிப்பிட்டுள்ளோம். அதை வேண்டாம் என்று நினைப்போருக்கு தீர்வையும் ஹெச்டிஎப்சி வங்கியே தருகிறது. அதை தான் நாம் குறிப்பிட்டுள்ளோம்.












Click it and Unblock the Notifications