சொத்துக்குவிப்பு வழக்கில் டிடிவி தினகரன் மட்டும் தப்பியது எப்படி? - நல்லமநாயுடு பரபர தகவல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று டிடிவி தினகரனும் சிறை சென்றிருக்க வேண்டியவர்தான். எப்படி அவர் தப்பித்தார் என்று வழக்கின் விசாரணை அதிகாரிகயாக செயல்பட்ட நல்லமநாயுடு கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்காமல் தப்பித்த காரணத்தால் இப்போது டிடிவி தினகரன் அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். போயஸ் தோட்டத்தில் இருந்த டிடிவி தினகரன் மட்டும் இந்த வழக்கில் இருந்து தப்பியது எப்படி என்று விசாரணை அதிகாரி நல்லமநாயுடு கூறியுள்ளார்.

இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 14ஆம் தேதி செவ்வாய்கிழமை வெளியானது. தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கிற்கு காரணகர்த்தா யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் வழக்கின் விசாரணை அதிகாரி நல்லமநாயுடு சேகரித்த சாட்சியங்கள், ஆவணங்கள்தான் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க காரணமாக அமைந்தது. சொத்துக்குவிப்பு வழக்கின் 21 ஆண்டுகால பயணம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் நீதி வென்றுள்ளது என்று கூறியுள்ளார் வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம நாயுடு.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பு

நல்லமநாயுடுவிற்கு இப்போது 79 வயதாகிறது. மனைவி விஜயலட்சுமி, 2 மகன்கள், 2 மகள்கள் மருமகன்கள், மருமகள்கள், பேரப்பிள்ளைகளுடன் சந்தோசமாக சென்னை பெரவள்ளூரில் வசித்து வருகிறார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான உடனேயே பலரும் இவரை போனில் அழைத்து வாழ்த்து கூறி வருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை

மகன், மருமகன் அரசு பணியில் இருக்கின்றனர். இந்த வழக்கு மூலம் பல இன்னல்களை அனுபவித்த நல்லமநாயுடு, இப்போது மகிழ்ச்சியடைந்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர்.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

இந்த வழக்கில் இப்போது துணை பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரனும் சேர்க்கப்பட்டு இருந்தார். லண்டனில் அவர் சொத்துக்களை வாங்கி இருந்தார். இது பற்றி விசாரிக்க நேரடியாகவே லண்டன் சென்று ஆவணங்களை சேகரித்து வந்தார் நல்லமநாயுடு.

அதிமுக துணை பொதுச்செயலாளர்

அதிமுக துணை பொதுச்செயலாளர்

டிடிவி தினகரனை சேர்த்ததன் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை தாமதமாகவே அவரை தனியாக பிரித்து விட்டோம் என்று கூறியுள்ளார் நல்லமநாயுடு. இதன் காரணமாகவே அவர் தண்டனையில் இருந்து தப்பியுள்ளார். இப்போது அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்சியை வழிநடத்த இருக்கும் தினகரன் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. முக்கியமாக அந்நியசெலவாணி மோசடி வழக்கு உள்ளது. பல வழக்குகளில் விசாரணை இன்னமும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+