வசமாக சிக்கிய வாணியம்பாடி வினிதா.. மலேசியா ரிட்டன் கணவன்.. மலையடிவாரத்தில் சமாதியானது எப்படி?
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் மலேசியாவில் இருந்த திரும்பிய கணவனை, கள்ளக்காதலனை வைத்து கொலை செய்த மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சியில் உள்ள கிராமம் கோயான்கொள்ளை. இந்த ஊரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு 35 வயது ஆகிறது. இவர் ஒரு கட்டிட தொழிலாளியாவார். மலேசியாவில் சில காலம் பணியாற்றிவிட்டு ஊர் திரும்பிய விஜயகுமாரை யாரோ கொலை செய்து, கடந்த நவம்பர் மாதம் 21-ந் தேதி வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டாவில் உள்ள பலக்கல்பாவி முருகன் கோவில் மலையடிவாரத்தில் புதைத்திருக்கிறார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்து விசாரித்த, திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரின் உடலை மீட்டு விசாரித்தபோது, எப்படி கொலை நடந்தது என்பதை கண்டுபிடித்தனர். அதற்கு அவரது செல்போன் முக்கிய துருப்பாக இருந்தது. கொலை செய்யப்பட்ட விஜயகுமார் செல்போனில் கடைசியாக யாரிடமெல்லாம் பேசினார் என்பதை ஆய்வு செய்தனர். அதன்படி, திருப்பத்தூரை அடுத்த புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த ராகவேந்திரா (28) என்பவரை பிடித்து விசாரித்த போது தான் விஜயகுமார் ஏன் கொல்லப்பட்டார் என்பது போலீசுக்கே தெரியவந்தது.
கள்ளக்காதல் விவகாரத்தில் விஜயகுமார் கொல்லப்பட்டதும் திம்மாம்பேட்டை போலீசாருக்கு தெரியவந்துள்ளது. கட்டிட தொழிலாளியான விஜயகுமார், வேலைக்காக மலேசியா சென்றிருக்கிறார். அப்போது அவரது மனைவி வினிதாவுக்கும், விஜயகுமாரின் நண்பர் ராகவேந்திராவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. கடந்த மாதம் விஜயகுமார் மலேசியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பி உள்ளார. அப்போது அவரது மனைவி வினிதாவுக்கும், வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பது அக்கம் பக்கத்தினர் கூறியததால் தெரியவந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகுமார்,மனைவி வினிதாவிடம் கேள்வியெழுப்பி சண்டைப் போட்டுள்ளார். இதையடுத்து, கோபித்துக் கொண்ட குழந்தையை தூக்கிக்கொண்டு உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறிய வினிதா, ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த மல்லானூர் பகுதியிலுள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் , விஜயகுமாரைச் சந்திக்க கடந்த மாதம் 18-ம் தேதி இரவு, ராகவேந்திரா சென்றுள்ளார். ஜோலார்பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்பரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். ராகவேந்திரா, விஜயகுமாரிடம் உன்னிடம் நிறைய பேசனும் தவறாக எடுத்துக்கொள்ளாதே, உண்மை இதுதான் .. உன் மனைவியுடன் எந்த தவறான உறவும் இல்லை என்று நைசாக பேசி உள்ளார. இதை உண்மை என்று நம்பி விஜயகுமாரும் மல்லகுண்டா அருகேயுள்ள பலக்கல்பாவி முருகர் கோயில் மலை அடிவாரத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு ராகவேந்திராவும், விஜயகுமாரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது ராகவேந்திரா, போதை அதிகமான பின்னர், திடீரென விஜயகுமாரின் தலையில் கல்லை போட்டு, கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறாராம். பின்னர் ராகவேந்திரா அவரது நண்பர் ஜோலார்பேட்டையை சேர்ந்த சங்கருடன் சேர்ந்து குழி தோண்டி பிணத்தை புதைத்து விட்டு சென்றுள்ளார்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து ராகவேந்திரா, சங்கர் ஆகியோரை திம்மாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக விஜயகுமாரின் மனைவி வினிதாவிடம் விசாரித்த போது, அதில் அவருக்கும், இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிந்தது. அதனால் அவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications