"15 நாட்கள் தான் டைம்! விளக்கம் கொடுங்க.." சிதம்பரம் தீட்சிதர்களுக்கு பறந்த அறநிலையத்துறை நோட்டீஸ்
சிதம்பரம்: சிதம்பரம் கோயில் மீது பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக அறநிலையத் துறை முக்கிய நடவடிக்கையை எடுத்து உள்ளது.
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் நிர்வாகம் குறித்து அறநிலையத் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புகார்கள் குறித்து விசாரணை நடத்தச் சிறப்புக் குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைத்தது.
இந்த சிறப்புக் குழு கடந்த மாதம் சிதம்பரம் கோயிலில் ஆய்வு நடத்த நேரடியாகச் சென்றது. இருப்பினும், சிறப்புக் குழு ஆய்வு நடத்தச் சிதம்பரம் தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை.

நகை சரிபார்ப்பு ஆய்வு
இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தச் சூழலில் கடந்த ஜூலை 19ஆம் தேதி கடிதம் சிதம்பரம் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி இருந்தனர். அதில் வரும் 25ஆம் தேதி நகை சரிபார்ப்பு ஆய்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அதற்குப் பதில் அளிக்கும் வகையில் நேற்று முன்தினம் தீட்சிதர்கள் பதில் கடிதம் எழுதி இருந்தனர்.

பதில்
அதில் 1956இல் இருந்து நகைகள் ஆய்வு மற்றும் சரி பார்ப்பதற்கு நாங்கள் ஒத்துழைப்பு தருவதாகவும் இருப்பினும் தீட்சிதர்கள் சிலர் வட இந்தியாவில் நடைபெறும் வேத பாராயண விசேஷ நிகழ்ச்சிகளுக்குச் சென்று உள்ளதாலும் ஆய்வுக்குக் குறுகிய கால அவகாசமே இருப்பதாலும் தங்களது ஆய்வினை வரும் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திற்குப் பின் எங்களிடம் முன்கூட்டியே தெரிவித்து ஆய்வு மேற்கொள்ளக் கேட்டுக்கொள்வதாக அதில் கூறப்பட்டு இருந்தது.

நோட்டீஸ்
முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்த கருத்துகளைப் பொதுமக்கள் தெரிவிக்காமல் என்று அறநிலையத்துறை அறிவித்து இருந்தது. அப்போது அறநிலையத் துறைக்கு சுமார் 19 ஆயிரம் மனுக்கள் வந்தாக கூறப்பட்டு இருந்தது. அதில் பெரும்பாலான மனுக்கள் நிர்வாகத்திற்கு எதிராகவே இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனிடையே இன்று சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை விசாரணைக் குழு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.

மொத்தம் 28 குற்றச்சாட்டுகள்
அதில் சிதம்பரம் கோயில் நிர்வாகம் தொடர்பாக அறநிலையத்துறைக்கு மொத்தம் 19,405 மனுக்கள் வந்ததாகக் கூறப்பட்டு உள்ளது. அதில் பெரும்பாலான மனுக்கள், அதாவது 14,098 மனுக்கள் நிர்வாகத்திற்கு எதிராக உள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. எனவே, சிதம்பரம் கோயில் நிர்வாகம் மீது பக்தர்களின் 28 குற்றச்சாட்டுகள் குறித்து 15 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸில் கூறப்பட்டு உள்ளது.

15 நாட்களில் விளக்கம்
ரூபாய் 10 ஆயிரம் தந்தால் பிரசாரம் வீடு தேடி வரும் என்று கூறி வசூல் செய்யும் தொகைக்கு ரசீது வழங்குவதில்லை என்றும் பல பக்தர்கள் புகார் அளித்துள்ளதாக அதில் கூறப்பட்டு உள்ளது. மேலும், நடராஜர் கோயிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து எழுப்பிய தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்களைத் தீட்சிதர்கள் தரக்குறைவாகப் பேசி அவமதிப்பு செய்வதாகப் புகார் எழுந்துள்ளதாக அந்த நோட்டீஸில் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications