பஞ்சாங்கத்தில் சொன்னது போல வரும் ஞாயிறன்று சென்னையை புயல் தாக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகின் இயக்கம் மற்றும் நவக்கிரங்கள் என்னும் 9 கோள்களின் இயக்கங்கள் பற்றி கணித்து கூற முன்னோர்கள் கண்டறிந்த பஞ்சாங்கத்தில் புயல்கள் பற்றிய பகீர் தகவல்கள் அடங்கியுள்ளதாக புதிய பீதி கிளம்பியுள்ளது. இந்த செய்தி வாட்ஸப்பில் உலா வருகின்றது.

பண்டைய காலத்தில் நவீன வானியல் ஆய்வுக்கருவிகள் இல்லாத சூழ்நிலையில் முனிவர்கள் நவ கிரகங்களின் இயக்கத்தை துல்லியமாக கணித்தனர்.

தங்களது கணிப்புகளை வாக்கிய சுலோக குறிப்புகளாக எழுதியும் வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் தமிழ் ஆண்டு பிறப்பை அடிப்படையாக வைத்து பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.

ஜாதகம் கணித்தல்:

ஜாதகம் கணித்தல்:

இந்த பஞ்சாங்கங்களின் உதவியுடன் ஜாதகம் கணிப்பது, எதிர்கால பலன்களைச்சொல்வது போன்றவற்றை ஜோதிடர்கள் செய்கின்றனர்.

இரண்டு வகை பஞ்சாங்கம்:

இரண்டு வகை பஞ்சாங்கம்:

பஞ்சாங்கம் இருவகைப்படும். 1. திருக்கணித பஞ்சாங்கம், 2 வாக்கியப்பஞ்சாங்கம். இந்த இரண்டு பஞ்சாங்கங்களின் கணிப்புகளுக்கு இடையே 6 மணி 48 நிமிடம் வித்தியாசம் இருக்கும்.

இப்படித்தான் எழுதுகின்றார்கள்:

இப்படித்தான் எழுதுகின்றார்கள்:

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முனிவர்கள் எழுதிய சுலோகங்கள் அடிப்படையில் எழுதப்படுவது "வாக்கிய பஞ்சாங்கம்" எனப்படும். சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படுவது "திருக்கணித பஞ்சாங்கம்" ஆகும். எனினும், வாக்கிய முறை பஞ்சாங்கத்தையே பல்வேறு ஜோதிடர்களும் வெளியிட்டு வருகிறார்கள்.

அப்படியே நடந்துள்ளது:

அப்படியே நடந்துள்ளது:

அவ்வாறு வெளியான ஒரு வாக்கிய பஞ்சாங்கத்தில் கடந்த 14 ஆ தேதி அன்று "புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

உலுக்கப் போகும் புயல்:

உலுக்கப் போகும் புயல்:

இதுபோல அந்த பஞ்சாங்கத்தில் வருகிற 21 ஆம் தேதி சனிக்கிழமை முதல் "ஒரு வாரம் மழை பெய்யும்" என்றும், 22 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று "புயல் பலமாக சென்னையை உலுக்கும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது பல்வேறு தரப்பிலும் பீதியைக் கிளப்பியுள்ளது.

ஆனால், இதுவரை புதிய புயல் சின்னம் ஏதும் உருவாகவில்லை...

வி ஆர் வெயிட்டிங்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+