வீடு வாடகைக்கு எடுத்து புது மனைவியை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன் கைது
விழுப்புரம்: விழுப்புரத்தில் புது மனைவியை வாடகை வீடு பிடித்து விபாசாரத்தில் ஈடுபடுத்திய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் வி.மருதூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 25). இவருக்கும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த சந்திரா(வயது 24), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்கள் இருவரும் விழுப்புரம் கே.கே.ரோடு மணி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். அந்த வீட்டிற்கு வாலிபர்கள் அடிக்கடி வந்து சென்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ஏரியாவாசிகள் அங்கு விபசாரம் நடப்பதாக விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிக்கு புகார் அளித்தனர்.
இதையடுத்து நேற்று அவர் போலீசாருடன் அங்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் சந்திரா உடன் வி.மருதூர் மகாபாரத தெருவை சேர்ந்த வாலிபர் ராமராஜன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சந்திராவையும், ராமராஜனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் புதுப்பெண் சந்திராவையும் அவரது கணவர் கோபிநாத்தே விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கோபிநாத்தையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
ராமராஜனும், கோபிநாத்தும் விழுப்புரம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். சந்திரா சென்னையில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
திருமணமான 3 மாதத்திலே மனைவியை கணவன் விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications