படிப்புச் செலவுக்காக... மனைவியை "வாடகை"க்கு விட்டு பணம் சேர்த்த கணவர்!
சென்னை: மனைவியின் படிப்புச் செலவுக்காக அவரை வைத்து ஆண்களுக்கு சபல ஆசை காட்டி பணம், நகை திருடிய கணவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். அவரது மனைவி தப்பி விட்டார். அவரையும் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை காந்தி நகரைச் சேர்ந்த ஜெகதீஸ்ரவன் என்ற வாலிபர் ஐஏஎஸ்ஸுக்காக படித்து வருகிறார். இணையதளத்தில் ஒருமுறை பிரவுஸ் செய்து பார்த்தபோது ஒரு இணையதளத்தில் எனது மனைவியுடன் உறவு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய எண் என்று கூறி ஒரு தொலைபேசி எண் தரப்பட்டிருந்தது.

சபலப்பட்டுப் போன ஜெகதீஸ்வரன் உடனே போனைப் போட்டார். மறு முனையில் பேசியவர் வெங்கடரமணன் என்பவர். அவர் ஜெகதீஸ்வரனிடம், எனது மனைவியுடன் தாராளமாக உறவு கொள்ளலாம். ஆனால் அவர் லாட்ஜுக்கோ, ஹோட்டலுக்கோ வர மாட்டார். எங்களது வீட்டுக்கும் நீங்க வரக் கூடாது. உங்க வீட்டுக்கு வரத் தயார். ரெடின்னா சொல்லுங்க அனுப்பி வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதற்கு வெங்கட்ரமணன், 25ம் தேதி (கடந்த மாதம்) வீட்டுக்கு வாங்க என்று கூறியுள்ளார். அதன்படி மனைவி சிந்துஜாவுடன் வந்துள்ளார் வெங்கடரமணன். வீட்டுக்கு வந்ததும் எனக்குத் தலை வலிக்கிறது காபி வேண்டுமே என்று கேட்டுள்ளார் சிந்துஜா. அதற்கு வெங்கடரமணன், நீங்க ரெண்டு பேரும் அப்படியே ஜாலியாக போய் காபி சாப்பிட்டுட்டு வாங்க என்று கூறி அனுப்பி வைத்துள்ளார். ஜெகதீஸ்வரனும் சிந்துஜாவை அழைத்துப் போயுள்ளார். வீட்டில் வெங்கடரமணன் மட்டும் இருந்துள்ளார்.
காபி சாப்பிட்டு விட்டு இருவரும் வீடு திரும்பினார். ஆசையுடன் ஜெகதீஸ்வரன் காத்திருந்தார். ஆனால் சிந்துஜா திடீரென எனக்கு உடம்பு சரியில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஜெகதீஸ்வரன் பெரும் ஏமாற்றமடைந்தார். வெங்கடரமணனும், இன்னொரு நாள் வருகிறோம். இப்போது மருத்துவமனைக்குப் போகிறோம் என்று கூறி விட்டு காரில் ஏறி மனைவியுடன் போய் விட்டார்.
கைக்குக் கிடைத்தது... கதையாக அதிருப்தியுடன் இருந்த ஜெகதீஸ்வரன் படுக்கை அறைக்குப் போய் படுக்கலாம் என்று போனார். அங்கு பீரோ கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைநத் அவர் உள்ளே போய்ப் பார்த்தபோது அங்கு வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் ரொக்கம், 75 பவுன் நகை ஆகியவற்றைக் காணவில்லை. உடனே வெங்கடரமணனுக்குப் போனைப் போட்டார். ஆனால் அது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.
இதையடுத்து தனது பெற்றோர் வீட்டுக்கு வந்ததும் நடந்ததைக் கூறியுள்ளார் ஜெகதீஸ்வரன். அவர்கள் தலையில் அடித்துக் கொண்டு, போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் நடத்திய துரித விசாரணையில் வெங்கடரமணன் சிக்கினார்.
வெங்கடரமணன் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவி சிந்துஜா சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் ஹைதராபாத்தில் வேலை பார்த்தபோது காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். மலேசியாவுக்குத் தப்பிச் செல்ல மனைவியுடன் வெங்கடரமணன், சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தார். அப்போதுதான் அவர் சிக்கினார். ஆனால் சிந்துஜா நைசாக எஸ்கேப் ஆகி விட்டார்.
சிந்துஜா படித்து வருகிறாராம். அவரது படிப்புச் செலவுக்காகவே இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் வெங்கடரமணன். பல பகுதிகளில் இதுபோல இருவரும் மோசடி செய்து பணம், நகைகளைத் திருடியுள்ளனராம்.
-
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications