தென்காசி அருகே மனைவியுடன் சண்டை போட்டவர் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை
நெல்லை: மனைவியுடன் தகராறு செய்து விட்டு சென்ற நபர் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி அருகேயுள்ளது புளியரை கிராமம் கணபதி என்பவரது மகன் ஓட்டல் தொழிலாளியான ஹரிஹர சுப்பிரமணியன் இவருக்கும் பாவூர் சத்திரம் அருகேயுள்ள பட்டமுடையார்புரம் பகுதியை சார்ந்த வெள்ளத்துரை என்பவரது மகள் சுதா என்பவருக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கும் கடந்த 3மாதங்களுக்கு முன் சிறு சிறு பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுதா கணவனிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு மனைவியை கூப்பிட ஹரிஹர சுப்பிரமணியன் சென்றுள்ளார். அப்போது மனைவி ஊருக்கு வர மறுத்துள்ளார். அவர் மனைவியுடன் சண்டைப் போட்டுள்ளார். அப்போது அவரை சிலர் சமாதனம் செய்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை பட்டமுடையார்புரம் காட்டுப் பகுதியில் ரத்தகாயங்களோடு ஒருவர் பிணமாக கிடப்பதாக பாவூர் சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்யப்பாட்டு கிடப்பது ஹரிஹர சுப்பிரமணியன் என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஹரிஹர சுப்பிரமணியன் உடலைக் கைப்பற்றிய போலீசார், அவர் கொலை செய்யப்பட்டாரா? அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications