மனைவியை பிளாஸ்டிக் கவரில் கட்டி வைத்துக் கொடூரமாக கொன்ற கணவன்
சென்னை: பிளாஸ்டிக் கவரில் கட்டி வைத்து மனைவியை கொன்ற கணவரை சென்னை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுவண்ணாரப்பேட்டை ஆவூர் முத்தையா தெருவை சேர்ந்தவர் மோகன் . தனியார் பள்ளி வாகன டிரைவர்.இவரது மனைவி ஷோபனா .
இவர்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு மோகன் வீட்டில் இருந்தார். அதன்பிறகு அவரை காணவில்லை. வீட்டின் கதவு தாழ்பாள் போடப்பட்டிருந்தது.
இன்று காலை வீட்டின் உள்ளே இருந்து துர்வாடை வீசியது. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் உதவி கமிஷனர் நசீர்பாட்சா உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் பலவேசம் சம்பவ இடம் சென்றார்.
அந்த வீட்டினுள் ஷோபனா பிளாஸ்டிக் பைக்குள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் காணப்பட்டன. இறந்து 2 நாட்கள் ஆகி இருந்ததால் பிணத்தில் இருந்து துர்வாடை வீசியது.
கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மோகன், அவரது மனைவி ஷோபனாவை அடித்து உதைத்ததாகவும், இதில் மயங்கி விழுந்த அவரை பிளாஸ்டிக் பைக்குள் திணித்து கட்டி கொலை செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
சினிமா பாணியில் இந்த கொலையை செய்த மோகன் தப்பி ஓடி தலை மறைவு ஆகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை புதுவண்ணாரப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications