சென்னையில் பயங்கரம்: மதுபோதையில் மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவன் கைது
மதுபோதையில் மனைவியை கல்லைபோட்டு கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video

சென்னை: சென்னையில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிகல்லைப்போட்டு கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடி, சிவகாமி அம்மை தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஜாபர் 50. இவரது மனைவி முபாரக் பேகம் 44. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.

அப்துல் ஜாபர் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதால் செய்துகொண்டிருந்த பரோட்டா மாஸ்டர் வேலைக்கும் ஒழுங்காக போவதில்லை. குடிப்பதற்கு பணம் தேவைப்படும்போதெல்லாம் மனைவி முபாரக்கிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வாராம். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு மனைவியை ஜாபர் கண்டபடி அடித்துவிடுவாராம்.
இந்நிலையில், ஜாபர் நேற்றிரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து முபாரக்கிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. நீண்ட நேர தகராறுக்கு பின்னர் முபாரக் தூங்க சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சண்டைபோட்டு கொண்டிருந்த மனைவி தூங்கிவிட்டதால் ஜாபருக்கு ஆத்திரம் அதிகமாகியுள்ளது. ஒருபுறம் போதையும், மற்றொருபுறம் ஆத்திரமும் தலைக்கேறிய ஜாபர் வீட்டிலிருந்த அம்மிக்கல்லை எடுத்து வந்து முபாரகின் மீது வீசியுள்ளார்.
இதனால் தலையிலும், மார்பிலும் பலத்த காயம் அடைந்த முபாரக் பேகம் அலறி துடித்து நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மனைவி உயிரிழந்ததை கண்ட ஜாபர் அங்கிருந்து தப்பி ஓடி அதே பகுதியில் பதுங்கி கொண்டார். அத்துடன் மனைவியை கொன்ற விஷயத்தை தனது மகளுக்கு போன் செய்து செய்துள்ளார்.
கொலை குறித்து தகவலறிந்து வந்த போலீசார் முபாரக் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தப்பிஓடி மறைந்திருந்த ஜாபரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications