ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெட்டிக் கொலை... மதுரை அருகே ராணுவ வீரர் வெறிச்செயல்!
மதுரை: மதுரை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியைப் பிரிந்த கோபத்தில், இக்கொலைகளை செய்ததாக ராணுவ வீரர் கமலக்கண்ணன் போலீசில் சரண் அடைந்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூர் நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (60). இவரது மனைவி ராமுத்தாயி (55). இத்தம்பதியினருக்கு பாக்யலட்சுமி (35), கோமதி (28), வனரோஜா (23) என 3 மகள்கள். இவர்களில் பாக்யலட்சுமிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராணுவ வீரர் கமலக்கண்ணனுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், மணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களது விவகாரத்து வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் சின்னச்சாமியின் உறவினரான அ.தொட்டியபட்டியை சேர்ந்த ராமர் மகளுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது. நேற்று ராமரின் வீட்டில் நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இதில் பங்கேற்க சின்னச்சாமியின் குடும்பத்தினர் ராமரின் வீட்டிற்கு வந்திருந்தனர். மாலை 6 மணிக்கு அங்கு வந்த கமலக்கண்ணன், அவரது தம்பி பரமசுந்தர் (29), ஆகியோர் சின்னச்சாமியுடன் தகராறு செய்தனர். சுமார் 2 மணி நேரம் இந்த சண்டை நீடித்தது.
அப்போது யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில், இரவு 8:15 மணியளவில், சகோதரர்கள் இருவரும் அரிவாளால் சின்னச்சாமி, ராமுத்தாயி, மகள்கள் பாக்யலட்சுமி, கோமதி, வனரோஜாவை வெட்டிச் சாய்த்தனர். இதில், வெட்டுப்பட்ட ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பின், கமலக்கண்ணன், பரமசுந்தர் நாகையாபுரம் போலீசில் சரண் அடைந்தனர்.
விடுமுறையில் விபரீதம்:
கொலை செய்த கமலக்கண்ணன் டெல்லியில் 'ஹவில்தாராக' பணிபுரிந்து விடுமுறையில் அ.தொட்டியபட்டிக்கு வந்திருந்தார். மனைவி குடும்பத்தினர் தனது சொந்த ஊருக்கே வந்தது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் இந்தக் கொலைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், விவாகரத்திற்குப் பின் கோமதிக்கு மறுமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் நடவடிக்கை எடுத்து வந்ததாகவும், இதுவும் கொலைக்கான காரணமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் மனைவி கோமதியை கமலக்கண்ணன் அரிவாளால் வெட்டிய போது உறவினர்கள் தடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அவரிடம் துப்பாக்கி இருந்ததால் உறவினர்கள் பயந்து ஓடி விட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இறந்த சின்னச்சாமியின் மகன் தங்கப்பாண்டி, 32, வெளியூரில் இருந்ததால் நிகழ்ச்சிக்கு வரவில்லை. அதனால் அவர் உயிர் தப்பியது.
சரணடைந்த கமலக்கண்ணன் மற்றும் அவரது தம்பியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications