மனைவியை மாடியில் இருந்து தள்ளிக் கொலை செய்த கணவன்
சென்னை: மனைவியை மருத்துவமனை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொளப்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வீரமணி. இவரது மனைவி சித்ரா. வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு 2 மகள்களும் ,ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக மனைவி சித்ராவின் நடத்தையில் வீரமணிக்கு சந்தேகப்பட்டு ஏற்பட்டது. இதனால், கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதுபோல் கடந்த வாரமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால், சித்ரா கோபித்துக் கொண்டு கொளப்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட் டார். குழந்தைகளை வீரமணி பார்த்துக் கொண்டு பள்ளிக்கு அனுப்பி வந்தார்.
தாயாரை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் மகள்களில் ஒருவரான ராஜேஸ்வரி வீட்டில் இருந்த தூக்க மருந்தை எடுத்து குடித்து விட்டாள். இதனால் உடல் நலம் பாதிக்கபட்ட அவளை குன்றத்தூர் அருகே கோவூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு மகளை பார்க்க சித்ரா நேற்று இரவு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, சித்ராவிடம் வீரமணி வீட்டுக்கு வந்து விடு குழந்தைகளுடன் சேர்ந்து வாழலாம் என்றார். ஆனால், சித்ரா குடும்பம் நடத்த வர மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்தவீரமணி சித்ராவை மருத்துவமனையின் 2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்தார் சித்ரா.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்தார். இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications