காதல் மனைவியை கழுத்தறுத்து கொன்று, தானும் தற்கொலை செய்த கணவன்.. அநாதையானது 5 மாத குழந்தை
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் தாய்-தந்தையை இழந்து அவர்களின் 5 மாத குழந்தை அனாதையான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் ராஜேஷ்குமார். இவர், சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் கால்டாக்சியில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவர், திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டை சேர்ந்த சென்னை போக்குவரத்து காவல் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வரும் கோதண்டத்தின் மகள் தமிழ்ச்செல்வி என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 மாதத்தில் அற்புதராஜ் என்ற ஆண் குழந்தை உள்ளது. தமிழ்ச்செல்வி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
சென்னையில் வசித்து வந்த இவர்கள், கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் உள்ள வள்ளலார் நகர், திருநகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை தங்கள் குழந்தையை பக்கத்து வீட்டில் கொடுத்து இருந்தனர். அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ்குமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவி தமிழ்ச்செல்வியின் மார்பு உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக குத்தினார். பின்னர் அவரது கழுத்தை அறுத்தார். இதில் படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
ஆத்திரத்தில் மனைவியை கொன்று விட்ட ராஜேஷ்குமார், பின்னர் வீட்டின் ஹாலில் தன் மனைவியின் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்டநேரம் ஆகியும் குழந்தையை வாங்க வராததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் தமிழ்ச்செல்வி வீட்டுக்கு சென்று பார்த்தனர். கதவு பூட்டி இருந்ததால் தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது அங்கு தமிழ்ச்செல்வி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையிலும், ராஜேஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் ராஜேஷ்குமார் மற்றும் தமிழ்ச்செல்வியின் உறவினர் கள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications