கொதிக்கும் பாலை மனைவி மீது ஊற்றிய கணவன்.. வரதட்சணை கேட்டு சித்ரவதை.. திண்டுக்கல் போலீசார் விசாரணை
மனைவியை வரதட்சணைக்காக கொடுமைப்படுத்திய கணவனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்: வரதட்சணை காரணமாக கட்டிய மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றி சித்திரவதை செய்த கணவனிடம் போலீசார் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள கிராமம் ரெட்டியபட்டி. இப்பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று தற்போது 2 பிள்ளைகள் உள்ளனர்.

சக்திவேல் கடந்த 7 ஆண்டுகளாக வரதட்சணை பிரச்சனையை தன் மனைவியிடம் எழுப்பியதுடன், அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவியிடையே தகராறும் ஏற்படும் என கூறப்படுகிறது. பல்வேறு சமயங்களில் வரதட்சணை வேண்டும் என்று கொடுமைப்படுத்தி சித்திரவதையும் செய்து வந்துள்ளதாக தெரிகிறது.
சம்பவத்தன்றும் மீண்டும் தம்பதிக்குள் வரதட்சணை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போதும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சக்திவேல் அப்போது அடுப்பில் கொதித்து கொண்டிருந்த பாலை எடுத்து மனைவியின் மீது ஊற்றினார். அத்துடன் அடங்காமல் கொலை மிரட்டலும் விடுத்தார்.
கொதிக்கும் பால் தன் மேல் பட்டதால் துடிதுடித்து கதறி அழுத சகுந்தாலாவை அங்கிருந்தவர்கள் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடமதுரை போலீசார் வரதட்சணைக்காக கொடுமைப்படுத்திய சக்திவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications