கடன் தொல்லை.. கணவன், மனைவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கணவன், மனைவி இருவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் பிஜுலு. இவர் சொந்தமாக ஓர்க் ஷாப் வைத்துள்ளார். வியாபார சம்பந்தமாக குமார் என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனிடையே தொழில் சரிவர நடக்காததால் கடனை அடைக்க முடியாத சூழ்நிலையில் பிஜுலு இருந்துள்ளார். இதனையடுத்து பணம் கொடுத்த குமார் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் உள்ளிட்ட 30 பேருடன் பிஜுலு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது கடன் வாங்கிய பணத்தை தருமாறு மிரட்டியுள்ளனர். மேலும் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் வெளியே வீசி விட்டு வீட்டை பூட்டி சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மனமுடைந்த பிஜுலு மற்றும் அவரது மனைவி இந்து ஆகியோர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தனர். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் தடுத்து அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications