நிலம் அல்ல கடல்.. நாகை கடல் பகுதியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளதா?
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் இந்த முறை விவசாய நிலத்திற்கு பதில் கடல் பகுதியில் அல்லது கடலுக்கு அருகில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் இந்த முறை விவசாய நிலத்திற்கு பதில் கடல் பகுதியில் அல்லது கடலுக்கு அருகில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் வேதாந்த நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும். ஒரு இடத்தில் ஓ.என்.ஜி.சி ஹைட்ரோ கார்பன் எடுக்கும்.

வெளியேறினார்கள்
முதலில் மீத்தேன் திட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட இருந்தது. கடும் எதிர்ப்பு காரணமாக இதை நிறுத்தினார்கள். அதன்பின் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்பட இருந்தது. அங்கும் எதிர்ப்பு நிலவி போராட்டம் நடந்ததால் இந்த திட்டம் ஜெம் நிறுவனத்தால் கைவிடப்பட்டது.
[தூத்துக்குடியில் மூடினால் என்ன, நாகையில் திறங்க.. வேதாந்தாவிற்கு ரத்தின கம்பளம் ]

இரண்டு விவசாய நிலம்
இந்த இரண்டும் விவசாய நிலம் அதிகம் உள்ள பகுதிகள் ஆகும். இங்கிருந்த விவசாயிகள்தான் இந்த திட்டத்திற்கு எதிராக கடுமையாக போராடினார்கள். அதன் காரணமாகவே இந்த திட்டம் கைவிடப்பட்டது. விவசாய நிலங்கள் பறிபோய்விடும் என்று போராடினார்கள்.

இப்போது என்ன செய்ய போகிறார்கள்
இந்த நிலையில்தான் தற்போது வேதாந்தா நிறுவனம் இரண்டு இடத்தில் இருந்தும், ஓஎன்ஜிசி ஒரு இடத்தில் இருந்தும் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. ஆனால் இந்த முறை நிலப்பகுதியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட போவதில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. ஆம் இந்த முறை கடல் பகுதியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளனராம்.

எப்படி செய்வார்கள்
இதை எப்படி செய்வார்கள் என்று விளக்கம் அளிக்கப்படவில்லை. ஆனால் நிலத்தில் செய்தால் பிரச்சனை எழும் என்று கடல் பகுதிக்கு அருகில் இந்த திட்டத்தை அரங்கேற்ற இருக்கிறார்கள். இதற்காகத்தான் இந்த முறை நாகை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications