தூத்துக்குடியில் மூடினால் என்ன, நாகையில் திறங்க.. வேதாந்தாவிற்கு ரத்தின கம்பளம்
டெல்லி: தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் பிரச்சனை இன்னும் ஓடிக்கொண்டிருக்கும்போதே வேதாந்தா குழுமம் நாகப்பட்டினத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துடன் களமிறங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குடும்பத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சுப் புகை மற்றும் நச்சுக் கழிவுகள் வெளியாவதாக அந்த ஊர் மக்கள் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தியபோது சரியாக அரசு கண்டு கொள்ளாத காரணத்தினால், மாபெரும் பேரணியை, மே மாதம் 22ம் தேதி நடத்தினர். அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பிறகு மக்களின் எழுச்சியை கட்டுபடுத்தமுடியாமல் ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இருப்பினும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இந்த உத்தரவுக்கு எதிராக வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்துள்ளது.

அமைப்பு
இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, உண்மையிலேயே ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. தருண் அகர்வால் கடந்த வாரம் தூத்துக்குடி வந்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்ததோடு, பொதுமக்களிடம் கருத்து கேட்டார்.

புது திட்டம்
இதனிடையே தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வைக்குமளவுக்கு இருப்பதாக சந்தேகம் தமிழக அரசு இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படும் என்று கூறி வேதாந்தா, தூத்துக்குடி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில், "நீங்கள் அதை எப்போது வேண்டுமானாலும் திறந்து கொள்ளுங்கள், இந்தா பிடியுங்கள், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு உங்களுக்கு அனுமதி தருகிறோம்" என்று மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

நாகப்பட்டினம்
தமிழகம் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் இன்று கையெழுத்தானது. நாகை மாவட்டம், கமலாபுரம் உட்பட இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல்
ஹைட்ரோ கார்பன் திட்டம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடியது என்று கூறி அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி போராட்டத்தில் 13 உயிர்களை காவு கொண்ட பிறகு வேதாந்தா நிறுவனம் இப்போது நாகப்பட்டினத்திலும் கால்வைப்பதும் போராட்ட களத்தில்தான். எனவே இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications