நானும் ரஜினி ரசிகன் தான்... அதகளப்படுத்தும் அமைச்சர் செல்லூர் ராஜூ!
அமைச்சர் செல்லூர் ராஜூ தானும் ரஜினி ரசிகர்தான் என தெரிவித்துள்ளார். அவர் மீது தனக்கு தனிப்பட்ட முறையில் மரியாதை உண்டு என்றும் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
சென்னை: அமைச்சர் செல்லூர் ராஜூ தானும் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்தான் என தெரிவித்துள்ளார். ஆனால் சிஸ்டம் சரியில்லை, ஸ்டாலின் சிறந்த நிர்வாகி என ரஜினி கூறுவதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் ரசிகர்களிடம் பேசிய ரஜினிகாந்த் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை எனக்கூறினார். மேலும் ஸ்டாலின் ஒரு சிறந்த நிர்வாகி என்றும் அவரை சுதந்திரமாக செயல்படவிடலாம் என்றும் கூறினார்.

ரஜினியின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே சலசலப்பை உருவாக்கியது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ரஜினி ஒரு வியாபாரி அவர் இன்றைக்கு ஒன்று பேசுவார் நாளைக்கு ஒன்று பேசுவார் என தெரிவித்திருந்தார்.
எம்ஜிஆருக்குப் பிறகு கட்சி தொடங்கியவர்கள் கதி என்னாச்சு என்பது மக்களுக்கு தெரியும் என்ற அவர், தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் கெட்டுப் போகவில்லை என்றும் கூறினார்.
அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த கருத்து ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ தானும் ரஜினி ரசிகர் தான் என்றார்.
மேலும் ரஜினிகாந்த் மீது தனக்கு தனிப்பட்ட முறையில் மரியாதை உண்டு என்றும் கூறினார். ஆனால் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என ரஜினி கூறுவதை ஏற்கமுடியாது என அவர் தெரிவித்தார்.
மேலும் ஸ்டாலின் ஒரு சிறந்த நிர்வாகி என்று ரஜினி கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். ரஜினியை கடுமையாக சாடிய அமைச்சர் செல்லூர் இரண்டே நாட்களில் அவருடைய ரசிகன் என தெரிவித்துள்ளார்.
தெர்மாகோல் திட்டத்திற்கு பெரும் புகழ் பெற்றுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ. அதனைத் தொடர்ந்து அவர் தொடர் சர்ச்சையிலும் சிக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications