நடிகன் என்பதை விட ஆன்மீகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்: ரஜினி
பணம், புகழ், ஆன்மீகம் இவற்றில் எது வேண்டுமென்று கேட்டால் ஆன்மீகம் தான் வேண்டும் என்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: நான் ஒரு நடிகன் என்பதை விட ஆன்மீகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு விழாவிற்கு தலைமை தாங்கினார். பரமஹம்ச யோகானந்தரினின் "தெய்வீக காதல்" ஆன்மீக புத்தகத்தை வெளியிட்டார் ரஜினி.

பின்னர் ரஜினி பேசுகையில், எனக்கு பணம், புகழ், ஆன்மிகம் இவற்றில் எது வேண்டும் என கேட்டால் நான் ஆன்மிகம் தான் வேண்டும் என கூறுவேன். ஆன்மிகத்தில் அதிக சக்தி கிடைக்கும் என்பதால் அதை பின்பற்ற பிடிக்கும்.

நான் குழப்பவாதி இல்லை, ஆன்மீகப் பாதையில் என் முதல் குரு அண்ணன் சத்யநாராயணா. அவரது மறைவுக்கு பின்னர் பல்வேறு குருக்களை பின்பற்றி வந்திருக்கிறேன். எனது ஆன்மீகத் தேடல் தொடந்து கொண்டே உள்ளது. இமயமலையில் ஏராளமான ஆன்மீக ரகசியங்கள் உள்ளன.

ராகவேந்திரரிடம் ஆன்மீகத்தை கற்றுக்கொண்டேன். நான் நடிகன் எனபதை விட ஆன்மிகவாதி என கூறிக்கொள்வதில் மிகுந்த பெருமையடைகிறேன். ஆன்மீக புத்தகங்களை படிப்பதில் எப்போதும் ஆர்வம் உண்டு. ஆண்டவன் வருவதற்கு மனதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எது நல்லது கெட்டது என்று தெரிந்தாலும் நாம் தவறு செய்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
-
வைகாசி விசாகம் 2026: எப்படி விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற முடியும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications