பதவி ஆசை இல்லை என பொய் சொல்ல மாட்டேன்: நடிகர் செந்தில்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: எனக்கு பதவி ஆசையே இல்லை என பொய் சொல்ல மாட்டேன் என்று நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் செந்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். திருச்சிக்கு பிரச்சாரத்திற்காக வந்த அவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

I am fond of power: Actor Senthil

அப்போது அவர் கூறுகையில்,

அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் ஜெயலலிதாவுக்கு உள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பொய் தகவல்களை வெளியிட்டு மக்களை திசை திருப்ப முயற்சி செய்து வருகிறது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது.

அதிமுகவில் சேர்ந்த நாளில் இருந்து கட்சிக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு பதவி ஆசையே இல்லை என பொய் சொல்ல மாட்டேன். அந்த ஆசை உள்ளது. தேமுதிக, த.மா.கா.-மக்கள் நலக் கூட்டணி நிலையானது அல்ல. அதனால் எதையும் செய்ய முடியாது.

ஸ்டாலின் பிரச்சாரத்தின்போது பொய் பேசுகிறார். அவர் துணை முதல்வராக இருந்தபோது ஏன் நமக்கு நாமே பயணத்தை மேற்கொள்ளவில்லை? என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+