துணை முதல்வர் பதவி மீது தமக்கு துளிகூட விருப்பமில்லை: வைகோ உறுதி
விருதுநகர்: துணை முதல்வர் பதவி மீது தமக்கு துளிகூட விருப்பமில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் சுதிஷ் கலந்துகொண்டு பேசுகையில், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்று அமைக்கப்படும் அமைச்சரவையில் வைகோவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தே.மு.தி.க-மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய வைகோ, கூட்டணி ஆட்சியில் எனக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று சகோதரர் சுதீஷ் சொன்னார். சுதீஷ் எல்லை மீறிய உணர்ச்சிவயப்பட்டு அப்படி பேசிவிட்டார். தமக்கு பதவியின் மேல் கற்பனையில் கூட விருப்பமில்லை என்றும் வைகோ கூறினார்.
விஜயகாந்த் முதலமைச்சர் ஆனபிறகு கூட்டணிக் கட்சிகள் எல்லாம் அமைச்சரவையில் இடம்பெறும். எந்தெந்த இலாக்காக்கள் என்பது அவர் முடிவு செய்யவேண்டியது. துணை முதலைமைச்சர் என்ற பொறுப்போ அல்லது அவையில் அமைச்சர் என்ற பொறுப்போ என் கற்பனையில் கூட இடம்பெற முடியாது. அந்த எண்ணத்திற்கே ஒரு சதவிகிதம் கூட இடம் கிடையாது. வைகோ சொன்னால் சொன்னதுதான். யாரும் மாற்றமுடியாது என்று உறுதியாக கூறினார்.
முன்னதாக பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி எண்ணிக்கைக் கூட இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று விமர்சனம் செய்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில்தான், தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications