நான் ஸ்லீப்பர் செல் இல்லை.. கண்ணீர்விட்ட செல்லூர் ராஜூ
நான் ஸ்லீப்பர் செல் இல்லை எனக் கூறி அமைச்சர் செல்லூர் ராஜூ கண்ணீர் விட்டுள்ளார்.
திருச்சி: நான் ஸ்லீப்பர் செல் இல்லை எனக் கூறி அமைச்சர் செல்லூர் ராஜூ கண்ணீர் விட்டுள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலாதான் எனக் கூறி தனது விசுவாத்தை வெளிப்படுத்தினார். இந்த செய்தி பல ஊடகங்களிலும் வெளியானது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், தான் ஏற்கனவே கூறியபடி ஸ்லீப்பர் செல்கள் இருப்பது உண்மை என்றார். மேலும் அவர்கள் தேவையான நேரத்தில் வெளியே வருவார்கள் என்றும் கூறினார்.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தினகரன் கூறியது போல் தான் ஸ்லீப்பர் செல் இல்லை என்றுக்கூறி கண்கலங்கினார்.
சசிகலா குறித்து தான் பேசியது தவறாக பெரிதாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் எளிமையான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த ஆட்சி தொடரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியமைய சசிகலா உதவி புரிந்தார் என என்னுடைய மனசாட்சியின் படியே கூறினேன் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மனசாட்சியின் படி நான் கூறிய கருத்தை அரசியாலக்கிவிட்டார்கள் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications