நீட்: கேரளா செல்லும் மாணவர்களுக்கு உதவும் அமமுக... பிரதிநிதிகளை அறிவித்தார் தினகரன்..!
நீட் எழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு உதவிகள் செய்ய தயார் என்று ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: நீட் எழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு உதவிகள் செய்ய தயார் என்று ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இது மாணவர்களுக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தும். சிபிஎஸ்இ அறிவிப்பிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் சிபிஎஸ்இக்கு எதிராக தீர்ப்பு வந்தது. ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது. தற்போது இதில் சிபிஎஸ்இ பிறப்பித்த உத்தரவு சரிதான், நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த கடைசி நேர மாற்றம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நீட் எழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு உதவிகள் செய்ய தயார் என்று ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் கூறியுள்ளார். மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தயார். கேரளாவில் உள்ள 10 மையங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு உதவி செய்ய தயார். பயண செலவு, தங்கும் வசதி செய்து தரப்படும். தேர்வு மையத்தை அடையாளம் காணவும் வழிகாட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது டிவிட்டில் ''கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தங்குமிட வசதியும், தேர்வு மையத்தை சுலபமாக அடையாளம் காண வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றுள்ளார். மேலும் மக்களுக்கு தொடர்பு கொள்ள 4 பேரின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது
கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 4, 2018
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தங்குமிட வசதியும், தேர்வு மையத்தை சுலபமாக அடையாளம் காண
வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது pic.twitter.com/SM8Qz3bqQ3
அதில் 9363109303, 9994211705, 8903455757, 7373855503 என மொத்தம் நான்கு போன் நம்பர்கள் கொடுத்துள்ளார். மொத்தம் மூன்று நபர்கள் இதற்காக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications