மவுன விரதம் இருப்பதால் விசாரணைக்கு வர முடியாது.. வருமான வரித்துறைக்கு சசிகலா கடிதம்
மவுன விரதம் இருப்பதால் வருமான வரித்துறை விசாரணைக்கு வர முடியாது என சசிகலா குறிப்பிட்டு இருக்கிறார்.
சென்னை: மவுன விரதம் இருப்பதால் வருமான வரித்துறை விசாரணைக்கு வர முடியாது என சசிகலா குறிப்பிட்டு இருக்கிறார்.
சசிகலா தற்போது பெங்களூர் சிறையில் இருக்கிறார். இவரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்த இருக்கிறது. போயஸ் தோட்டத்தில் வருமானவரித்துறை கடந்த நவம்பர் 17-ம் தேதி சோதனை நடத்தியது.

இந்த சோதனைக்கு பின்பு சசிகலாவை விசாரணை நடத்த நோட்டிஸ் அனுப்பியது. தற்போது அந்த நோட்டீஸுக்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
அதில் ''கடந்த சில நாட்களாக நான் மவுன விரதம் இருக்கிறேன். மவுன விரதம் இருப்பதால் வருமான வரித்துறை விசாரணைக்கு வர முடியாது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ''பிப்.10 வரை விசாரணைக்கு ஆஜராக வர இயலாது. அதற்கு பின் நடக்கும் விசாரணையில் கலந்து கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த கடிதம் மீது வருமான வரித்துறை இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. விசாரணை தேதி மாற்றம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications