''ஊழல் செஞ்சா ஜெயில்ல போடுறாங்க, அங்க கொசு கடிக்க தான் செய்யும்''!: விஜய்காந்த்
கோவை: நீங்க எல்லாம் இளைஞர்கள்... தமிழ்நாட்ல நம்ம கட்சியை வளர்க்க பம்பரமா சுத்தணும்... என்று விஜயகாந்த் கூற தொண்டர்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.
நீங்களும் இளைஞர்தான் என்று கூட்டத்தில் இருந்து ஒரு தேமுதிக நிர்வாக குரல் கொடுக்கவே உற்சாகமானார் விஜயகாந்த்.
செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அதுவரை சீரியசாக பேசிக்கொண்டிருந்த விஜயகாந்த், கொஞ்சம் கலகலப்புக்கு மாறினார். இதனையடுத்து கூட்டமும் கலகலப்பானது.
விஜயகாந்தின் கலகலப்பான பேச்சை மேற்கொண்டு படியுங்களேன்.

ஜெயில்ல கொசுதான் கடிக்கும்
தமிழ்நாட்ல மொத்தம் எத்தனை முதல்வர்னே தெரியலையே? பார்த்தசாரதி கோயிலுக்கு சசிகலா மட்டும் வந்தாங்க அப்படின்னு பேப்பர்ல போடுறாங்க. ஊழல் பண்ணா ஜெயில்லதான் போடுறாங்க. அப்புறம் கொசுதான் கடிக்கும். எங்களுக்கும்தான் கரண்ட் இல்லாம கொசு கடிக்குது.

அடுத்து ஹீரோவா நடிக்கப் போறேன்
நம்ம கட்சியை தமிழ்நாட்டு மக்கள்ட கொண்டு போய் சேர்க்க நீங்க எல்லாம் பம்பரமா சுத்தணும். ராத்திரி பகல் பார்க்க கூடாது... செய்வீங்களா? செய்வீங்களா? செய்யணும், செய்வோம். ஏன்னா நீங்க எல்லாம் இளைஞர்கள்.... என்னது நானும் இளைஞன்தானா? சரி நானும் இளைஞன்தான். நானும் களத்தில இறங்கறேன். அடுத்து ஒரு படத்துல ஹீரோவா நடிக்கப் போறேன் (அய்யோ). அது பத்தி அப்புறம் வர்றேன்.

சாப்பாடு ரெடி
அப்போ அந்தப்பக்கம் ஒருவர் வந்து விஜயகாந்த் காதருகே கிசுகிசுக்கவே.. சுதாரித்த விஜயகாந்த். அது ஒண்ணுமில்லை.. பொதுக்குழு, செயற்குழு வந்த எல்லோருக்கும் சாப்பாடு ரெடியா இருக்காம். அதைத்தான் இப்படி ரகசியமாக சொல்லிட்டு போறார். நான் எதையும் மறைக்க மாட்டேன் என்றார்.

நன்றி நன்றி...
கூட்டத்திற்கு வந்த பத்திரிகை நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி அப்புறம் விஜயகாந்த் நன்றி சொல்லலைன்னு எழுதக்கூடாது. நான் யோசிச்சு யோசிச்சு மனசுல பட்டதை பேசுவேன். பேசிட்டு இருக்கிறப்வே மறந்திடுவேன் என்று கூறி ஒருவழியாக பேச்சை முடித்தார் விஜயகாந்த்.

ஓவர் பில்டப் கடைசியில் புஸ்
தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் பற்றிய அறிவிப்பு வந்த உடனே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விலகுவது பற்றிய ஏதாவது பரபரப்பான செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எந்த வித அறிவிப்பும் வெளியாகாமல் புஸ் ஆகிவிட்டது கூட்டம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications