விலங்குகளை தமிழ், சமஸ்கிருதத்தில் பேச வைக்க போறேன்.. சாப்ட்வேர் ரெடி.. நித்தியானந்தா அதிரடி!
விலங்குகளை ஒரு சாப்ட்வேர் மூலம் பேச வைக்க போவதாக கூறி சாமியார் நித்தியானந்தா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
Recommended Video

சென்னை: விலங்குகளை ஒரு சாப்ட்வேர் மூலம் பேச வைக்க போவதாக கூறி சாமியார் நித்தியானந்தா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
தற்போது இந்தியாவில் உள்ள சாமியார்கள் நிறைய அவதாரங்கள் எடுத்து வருகிறார்கள். அரசியல் விமர்சகர்கள், நதி பாதுகாவலர்கள், பொருளாதார வல்லுநர்கள், நிறுவன அதிபர்கள் என்று.
அதில் நித்தியானந்தா தற்போது ''அல்காரிதம்'' எழுதும் ''கோடிங்'' ஜாம்பவானாக உருவெடுத்து இருக்கிறார். ஆம் விலங்குகளை பேச வைக்க இவர் சாப்ட்வேர் உருவாக்கி இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு அவர் கூறும் விளக்கம் பலரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நேற்றுதான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சூத்திரம் ஒன்றை தவறு என்று சாமியார் நித்தியானந்தா கூறிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
|
பேச வைக்கிறார்
இந்த நிலையில்தான் விலங்குகளை பேச வைக்க போவதாக நித்தியானந்தா கூறியுள்ளார். இதை எப்படி செய்ய போகிறேன் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதை செய்த பின் மொத்த உலகமும், ஏலியன் முதற்கொண்டு எல்லாம் இவரைத்தான் பின்பற்ற வேண்டும் என்று இவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு என்று சாப்ட்வேர்
மேலும் நித்தியானந்தா இதற்கு என்று சாப்ட்வேர் ஒன்றும் உருவாக்கி இருக்கிறாராம். ஆம், இதை ஏற்கனவே சோதனையும் செய்து பார்த்துவிட்டாராம். இது மிகவும் நன்றாக வேலை செய்கிறது. சில மாற்றங்களுக்கு பின் ஒரு வருடத்தில் விலங்குகளை பேச வைக்க போகிறேன் என்று இவர் கூறியுள்ளார்.

அட இது லிஸ்ட்லயே இல்லையே
மேலும் குரங்குகளுக்கு மிகவும் சரியான குரல்வளையை உருவாக்குவேன். சரியாக மொழியை பேசும் வகையில் புலிக்கும், சிங்கத்திற்கு இந்த மாற்றத்தை செய்வேன். ஒரு வருடத்தில் மாடுகள் நம்மிடம் வந்து அழகாக பேசும் என்றுள்ளார்.

தமிழ் சமஸ்கிருதம்
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அண்ணாரின் தமிழ் பாசம்தான். ஆம், இந்த சாப்ட்வேரை அவர் ஆங்கிலத்தில் உருவாக்கவில்லை. இதை அவர் தமிழில் பயன்படுத்த போகிறார். அதாவது அவர் விலங்குகளை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் பேச வைக்க போவதாக கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications